தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் நாளன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில், திருச்செந்தூர் தொகுதியின் அதிமுக கூட்டணி வேட்பாளராக, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் போட்டியிடுகிறார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின், அவர் திருச்செந்தூர் தொகுதி முழுக்க பரப்புரை செய்து வருகிறார். காயல்பட்டினத்தில், 23.04.2016. சனிக்கிழமை இரவில் வீதி வீதியாகப் பரப்புரை செய்தார்.
தீவுத்தெரு, முத்துவாப்பா தைக்கா தெரு வழியாக வந்த அவருக்கு இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF)யில் வரவேற்பளிக்கப்பட்டு, தொகுதி தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கி மனுவும் அளிக்கப்பட்டது.. அங்கிருந்த - குருவித்துறைப் பள்ளியின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.புகாரீ ஆலிமையுமு் அவர் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
இளைஞர் ஐக்கிய முன்னணி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
எந்த வேட்பாளர்களையும் யாரும் ஆதரிக்க அவரவர்களுக்கு உரிமை உண்டு அதுதான் ஜனநாயகம். ஆனால் அந்த வேட்பாளார்கள் இஸ்லாமியர்களாக இல்லாதிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தொப்பி அணிவித்து ஊர்வலமாக அழைத்து வரவேண்டிய கட்டாயம் இல்லை. அவரை அவராகவே இருக்க விடுங்கள். முஸ்லிம்கள் மிக கண்ணியமாக மதிக்கும் தொப்பியை இவர்களுக்கு அணிவித்து இவர்களை முஸ்லிம்கள் மாதிரி மக்கள் மத்தியில் காட்டாதீர்கள் என்று நண்பர்களை வேண்டிக் கொள்கிறோம்.
மேலும் ஒருவர் சட்டமன்ற உறுப்பினர் ஆனதின் பிறகுதான் இப்படிப் பட்ட சங்கங்கள் அவர்களுக்கு வரவேற்பு கொடுத்து நமது ஊருக்கு தேவையான மனுக்களை கொடுத்து அவற்றை நிறைவேற்றி தரும்படி கோரிக்கை வைக்க வேண்டும்.அதுதான் நடைமுறையில் உள்ள பழக்கம். இல்லா விட்டால் குறிப்பிட்ட சங்க உறுப்பினர்கள் அந்த வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விடும். குறிப்பாக இளைஞர் ஐக்கிய முன்னணியில் பல கட்சிகளை ஆதரிக்கும் உறுப்பினர்களும் இருப்பார்கள். அவர்கள் உள்ளங்கள் காயப் பட்டு விடும்.
நமது தொகுதி சட்டமன்ற உறுப்பினரை வரவேற்பது வேறு வேட்பாளராக களம் இறங்கி நிற்பவரை வரவேற்பது என்பது வேறு. தயவு செய்து நமது சங்கங்க உறுப்பினர்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தி விடாதீர்கள். ஊருக்கு நல்லது செய்வதற்காக ஏற்படுத்தப் பட்ட சங்கம் இது. பல நல்ல காரியங்களை செய்து நல்ல பெயரை தக்க வைத்துக்கொண்டுள்ள சங்கம். நாங்களெல்லாம் இளைஞர்களாக இருந்தபோது உருவாக்கிய சங்கம் இது அதன் கௌரவத்தையும் கட்சி சார்பின்மையையும் கட்டிக் காத்துக் கொண்டு வந்தோம். தயவு செய்து இந்த மாதிரி விஷயங்களில் கவனமாக இருங்கள் என்று தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.
யார் வெற்றிபெற்றாலும் நமது சங்கத்தில் அழைத்து அவரை நமது சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் பாராட்டு கூட்டம் நடத்துவதும் அவரிடம் நமதூருக்கு தேவையான வசதிகளை செய்து தாருங்கள் என்று கோருவதும் வரவேற்க தக்கது. அந்த நாள் மே 19க்குப் பிறகுதான் வரும். அதுவரை காத்திருங்கள்.
அதிமுக திமுக மக்கள் நலக் கூட்டணி பாட்டாளி மக்கள் கட்சி பாரதிய ஜனதா கட்சி எல்லோரும் திருசெந்தூர் தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறார்கள். அல்லாஹ் யாரை நாடி இருக்கிறானோ அவர் வெற்றி வாகை சூடுவார். அவரை நாம் வரவேற்போம் நமது கோரிக்கைகளை அவரிடம் வைத்து நமது ஊருக்கு தேவையானவைகளை வென்றெடுப்போம். அது வரை பொறுமையாக இருந்து இந்த சங்கத்தின் ஒற்றுமையை கட்டிக் காப்போம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross