தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் நாளன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில், திருச்செந்தூர் தொகுதியின் திமுக வேட்பாளராக, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின், அவர் திருச்செந்தூர் தொகுதி முழுக்க பரப்புரை செய்து வருகிறார். காயல்பட்டினம் பிரதான வீதி - பெரிய தெரு முனையில், 25.04.2016. திங்கட்கிழமையன்று 17.00 மணியளவில் பரப்புரை செய்தார்.
அவருக்கு பட்டாசு வெடித்து, மலர் தூவி வரவேற்பளிக்கப்பட்டது. திமுகவினர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும், நகர பொதுமக்களும் இதில் திரளாகக் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை, திமுக காயல்பட்டினம் நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் தலைமையில் கட்சியினர் செய்திருந்தனர். |