| |
செய்தி எண் (ID #) 17592 | | | வெள்ளி, ஏப்ரல் 22, 2016 | அபூதபீ கா.ந.மன்ற செயற்குழுவில் நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு! | செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 2429 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
ஐக்கிய அரபு அமீரகம் அபூதபீ காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அம்மன்றத்தின் மக்கள் தொடர்பு செயலாளர் ஏ.ஆர்.ரிஃபாய் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
இறையருளால் எமது அபூதபீ காயல் நல மன்றத்தின் 40ஆவது செயற்குழு கூட்டம், 15.04.2016 வெள்ளிக்கிழமை மாலையில், மன்ற செயற்குழு உறுப்பினர் A.S. ஹுவைலித் அவர்கள் தலைமையில், பொதுச்செயலாளர் மக்பூல் அஹ்மத் மற்றும் பொருளாளர் பீ.எம்.ஹுஸைன் நூருத்தீன் ஆகியோரது இல்லத்தில் நடைபெற்றது.
மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். பங்கேற்றோரின் விரிவான கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
மருத்துவ உதவி:
மருத்துவ உதவிக்காக ஷிஃபா அறக்கட்டளை மூலம் பரிந்துரைக்கப்பட்ட ஒருவருக்கு மன்ற ஷிஃபா ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விளக்கு எஸ்.செய்யித் அஹ்மத் விவரிக்க பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு அதற்குரிய தொகை ரூபாய் பத்தாயிரம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
ரமழான் மாத உணவுப்பொருள் வழங்கும் திட்ட உதவி:
எதிர்வரும் ரமழான் - நோன்பு மாதத்தை முன்னிட்டு காயல்பட்டினத்திலுள்ள ஏழை-எளிய பயனாளிகளுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கிட ஏற்கனவே முடிவு செய்த படி தனித்தனி அனுசரணை மூலம் அத்தியாவசிய சமையல் பொருட்கள் வழங்க நாடுவோர் உடனடியாக மன்றத்தலைவர் V.S.T.ஷேக்னா லெப்பை, மற்றும் இணைப் பொருளாளர் நோனா அபூஹுரைரா ஆகியோர்களை தொடர்புகொண்டு ரமழான் நெருங்கிவிட்டதை கருத்தில்கொண்டு பயனீட்டாளர்களின் முகவரியும், தொகையும் April 30 திகதிக்குள் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
பயனீட்டாளர்களின் முகவரியை பொருளுதவி செய்திட்ட உறுப்பினர்களின் பார்வைக்கு அனுப்பி சரிப்பார்த்து ஒப்புதல் பெறப்பட்டு மன்றம் சார்பாக உள்ளூர் ஒருங்கிணைப்பாளராக எற்பாடுசெய்யப்பட்ட காயல் நல மன்றத்தின் முன்னாள் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ அவர்கள் மூலம் சமையல் பொருளுதவி பயனீட்டாளர்களுக்கு வழங்கப்படும்.
இமாம்-பிலால் ஊக்கத்தொகை:
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வாவின்) முன்முயற்சியில் செய்யப்படும் - இமாம் பிலால் ரமழான் நோன்புப் பெருநாள் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்தாண்டைப் போல இவ்வாண்டும் இணைந்து செயல்படவும், அவ்வகைக்காக நிதியை வழங்குவதற்கு மன்றத்தலைவர் V.S.T.ஷேக்னா லெப்பை மற்றும் பொதுச்செயலாளர் மக்பூல் அஹ்மத் ஆகியோர்களை மன்ற உறுப்பினர்கள் தொடர்புகொண்டு தத்தம் நிதியை ஜகாத் மற்றும் ஸதக்கா வகையில் எதிர்வரும் புனித ரமழான் மாதம் இப்தாருடன் நடக்க விருக்கும் பொதுக்குழுவில் ஜூன் 16 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்பட்டது
ஜகாத் நிதி:
சென்ற வருடத்தைபோல் இவ்வருடமும் விருப்பமுள்ள உறுப்பினர்கள் (பொதுக்குழு நடைபெறும் தினம்) ஜூன் 16ஆம் திகதிக்கு முன்பாக தங்களின் ஜகாத் நிதியை மக்பூல் அஹ்மத் மற்றும் நோனா அபூஹுரைரா ஆகியோரிடம் அனுப்பித்தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இறுதியாக மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ துஆ இறைஞ்ச, கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்
(துணைத்தலைவர் - அபூதபீ கா.ந.மன்றம்)
அபூதபீ கா.ந.மன்றத்தின் முந்தைய (39ஆவது) செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அபூதபீ கா.ந.மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|