தமிழகத்தில் வரும் மே மாதம் 16ஆம் நாளன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதன்போது வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் சார்பில், வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தி மாவட்டம் முழுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வுப் பிரசுரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
ஆறுமுகநேரி காவல்துறையின் சார்பில், காவல்துறை ஆய்வாளர் பீட்டர் பால் துரை தலைமையிலான காவலர்கள், இன்று மாலையில் காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் விழிப்புணர்வுப் பிரசுரத்தை வினியோகித்து வருகின்றனர். காயல்பட்டினம் 01ஆவது வார்டுக்குட்பட்ட கடையக்குடி (கொம்புத்துறை), அருணாச்சலபுரம் பகுதிகளில் அவர்கள் பொதுமக்களிடம் பிரசுரங்களை வினியோகித்த காட்சி:-
|