தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் நாளன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில், திருச்செந்தூர் தொகுதியின் திமுக வேட்பாளராக அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின், நேற்று அவர் தொகுதியில் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
முதன்முறையாக காயல்பட்டினம் வந்த அவருக்கு, பேருந்து நிலையம் அருகில் திமுக சார்பிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் சார்பிலும், கொட்டு மேளம் முழங்க, பட்டாசு வெடித்து, மலர் தூவி உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
திமுக நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.ஷாஹுல் ஹமீத், எஸ்.ஐ.காதர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், காயல்பட்டினம் நகர கிளை செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் உள்ளிட்ட நிர்வாகிகளும், பொதுமக்களும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
|