2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான SDPI கட்சியின் சிறப்பு மாநில செயற்குழு கூட்டம் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹலான் பாகவி தலைமையில் நேற்று சென்னை பெரம்பூரில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாநில துணைத் தலைவர்கள் S.M.ரபீக் அஹமது, நெல்லை முபாரக், அம்ஜத் பாஷா, மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது, மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, அப்துல் சத்தார், உஸ்மான் கான், ரத்தினம் மற்றும் மாநில பொருளாளர் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்கள், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஏற்கனவே SDPI கட்சியின் மாநில செயற்குழு 2016 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று தீர்மானித்ததை அடுத்து எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது, வேட்பாளர்கள் யார் என்பது பற்றி விரிவாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இறுதியில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவது என்றும் அவற்றில் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.
1. துறைமுகம் - S.அமீர் ஹம்ஸா, மாநில செயலாளர்
2. திரு.வி.க.நகர் (தனி) - புஸ்பராஜ், வட சென்னை மாவட்ட செயலாளர்
3. கம்பம் - S.M.ரபீக் அஹமத், மாநில துணைத் தலைவர்
4. வேலூர் - ஹாஜி ஷேக் மீரான் , வேலூர் மாவட்ட SDPI வர்த்தகர் அணி தலைவர்
5. திருவாடனை - ஷரீப் சேட், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்
6. மதுரை மத்தி - நஜ்மா, மாநில மகளிரணி தலைவர்
7. ராயபுரம் - கோல்டு ரஃபீக், ராயபுரம் தொகுதி தலைவர்
8. கடையநல்லூர் - மெளலவி ஜாபர் அலி உஸ்மானி, மாநில செயற்குழு உறுப்பினர்
9. பாளையங்கோட்டை - மெளலவி சாஹுல் ஹமீத் உஸ்மானி நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர்
10. மானா மதுரை (தனி) - காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர். புதுக்கோட்டை
மேலும் இதர தொகுதிகளின் பட்டியல் மற்றும் வேட்பாளர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று மாநில தலைவர் தெரிவித்தார்.
தமிழக மக்கள் SDPI கட்சியை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
தகவல்:
SDPI - சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, தமிழ்நாடு முகநூல் பக்கம்
|