கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இயங்கி வரும் மலபார் காயல் நல மன்றம் (மக்வா) அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில், கூடுதலாக இரண்டு செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், நகர்நலன் குறித்து பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டு, முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில், அதன் செய்தி தொடர்பாளர் எஸ்.என்.மீரான் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருவருளால் எமது மலபார் காயல் நல மன்றத்தின் 17ஆவது பொதுக்குழுக் கூட்டம், இம்மாதம் 27ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில், JAN COTTAGE நெய்னா காக்கா இல்ல மாடியில் நடைபெற்றது.
மன்றத்தின் தலைவர் S.n.ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். செயலாளர் NM.அப்துல் காதர் துணைத் தலைவர் U.L.உதுமான் அப்துல் ராஷிக் துணைச் செயலாளர் ASIமுகம்மது சிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செய்தித் தொடர்பாளர் S.N. மீரான் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். உறுப்பினர் கிளூரு முகைதீன் தர்வேஷ் இறைமறையை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
வரவேற்புரை:
நிகழ்வுகளில் பங்கேற்க வந்திருந்த மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரையும் துணைச் செயலாளர் முகம்மது சிராஜ் - மன்றத்தின் சார்பில் வரவேற்றுப் பேசினார்.
தலைமையுரை:
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையுரையாற்றினார். மக்வா தொடங்கி 7 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை சுட்டிக்காட்டி அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட்டு இறைவனுடைய திருப் பொருத்தத்தை பெற்று மென்மேலும் நன்முறையில் செயல்பட அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை பொருளாளர் சேக் ஸலாஹுத்தின் சமர்ப்பித்து தான் புதியதாக பொறுப்பேற்ற பின் தனக்கு அளிக்கப் பட்டஉற்சாக வரவேற்பு ஆதரவு சந்தா வரவு குறித்து உரை நிகழ்த்தினார், மன்றத்தின் கணக்குத் தணிக்கையை கூட்டம் ஒருமனதாக அங்கீகரித்தது.
செயலர் உரை:
தொடர்ந்து, மன்றச் செயலாளர் N Mஅப்துல் காதர் உரையாற்றினார்.
மருத்துவ உதவி உட்பட - தேவையான நகர்நலப் பணிகள் அனைத்தையும், மக்வா இறையருளால் நிறைவாகச் செய்து வருவதாகக் கூறிய அவர், உலக காயல் நல மன்றங்களின் மருத்துவ உதவிக் கூட்டமைப்பான ஷிஃபா மூலம் பயனாளிகளுக்கு இதுவரை சுமார் 3லட்சம் ரூபாய் மக்வாவால் வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, அதன் முக்கியத்துவத்தை விளக்கிப் பேசினார்.
மன்ற உறுப்பினர்கள் தொய்வின்றி வழங்கி வரும் சந்தா தொகைகளைக் கொண்டே இப்பணிகள் திருப்திகரமாக செய்யப்பட்டு வருவதாகக் கூறிய அவர், மன்ற உறுப்பினர்கள் முகமலர்ச்சியுடன் தமது பங்களிப்பை வழங்குவது நிர்வாகிகளை பெரிதும் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது என்று பெருமிதத்துடன் பேசினார்.
மேலும் இந்த பருவத்திற்கான புதியகணக்கு தணிக்கையாளராக ஆதில் மொஹிதும் அவர்கள் பொதுக் குழுவால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கெளரவ ஆலோசகர்கள் உரை:
இக்கூட்டத்தில், இந்த பருவத்திற்கான மூன்று கெளரவ ஆலோசகர்களில் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் மற்றும் ஜாபர் சாதிக் ஆகிய இருவரும் மக்வாவின் சிறப்பான செயல்பாடுகள் மேலும் அதற்குரிய அருமையான ஆலோசனைகளையும் வழங்கினர்.
புதிய செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு -உரை:
இந்த 3-ம் பருவத்திற்கான முதலாவது பொதுக் குழுவில் தலச்சேரி மற்றும் பையனூர் ,தளிபரம்பு, கண்ணூர் ஆகிய பாகங்களிருந்து புதிதாக இரண்டு செயற்குழு உறுப்பினர்கள் பொதுக் குழுவால் தேர்ந்தெடுப்பது என முடிவு செய்யப்பட்டு தலச்சேரி பாகத்திருந்து M.I. நிஜாம் அவர்களும் கண்ணூர் பாகத்திலிருந்து M. G.செய்யது இஃப்ராஹீம் அவர்களும் பொதுக்குழுவின் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
இந்த பருவத்தின் புதிய செயற்குழு உறுப்பினர்களானN.M. இஸ்மாயில், M.I. நிஜாம், M.G.செய்யது இ ஃப்ராஹீம் புதிய உறுப்பினர்களின் ஆர்வமான அற்பணிப்பான செயல்கள் குறித்து உரை நிகழ்த்தினார்..
தேயிலை, வடை ஆயத்தப் பணிகள்:
பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, நிகழ்விடத்தின் கீழ்ப்பகுதியில் உறுப்பினர்கள் தேயிலை மற்றும் வடைக்கானசமையல் பணிகள் பரபரப்போடு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
கருத்துப் பரிமாற்றம்:
மக்வாவினுடைய செயல்பாடுகளில் கொண்டு வர வேண்டிய முன்னேற்த்திற்கான பல சுவாரஸ்யமான பல உபயோகமான பல கருத்துக்கள் பொதுக் குழுவில் விவாதிக்கப்பட்டது.
கருத்துப் பரிமாற்ற நேரத்தில் நம் மன்றம் துவங்கிய காலம் முதல் இன்று வரை செயற்குழுவில் பணியாற்றும் சகோதரர்கள் பேசுகையில் நலிவடைந்தவர்களுக்கு மருத்துவரீதியாக உதவி செய்வதை குறிப்பாக உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதை முக்கிய குறிக்கோளாக துவங்கிய மக்வா, இன்று வரை அதன் முக்கிய குறிக்கோளில் இருந்து எந்த மாற்றத்திற்கும் இடம் கொடுக்காமல் அதன் தனித்துவத்துடன் செயல்பட்டு வருகிறது என்பதையும் , இந்த மன்றத்தின் அனைத்து அதிகாரமும் பொருந்திய இந்த பொதுக்குழுவின் தீர்மானங்களில் இருந்து செயற்குழு எந்த மாற்றமும் செய்யவில்லை என்பதனையும் விளக்கி கூறினார்கள்.
மேலும் நம் மன்றத்தை பற்றி உறுப்பினர்களுக்கு விமர்சனங்கள் இருந்தால் அதனை பொதுக்குழுவில் கொண்டுவந்து விமர்சிப்பதை விட்டு விட்டு பொது தளங்களில் விமர்சிப்பது என்பது நாகரீகமற்ற செயல் என்பதை அனைத்து உறுப்பினர்களிடமும் கேட்டு கொண்டார்கள்.
நன்றியுரை:
செயற்குழு உறுப்பினர் S.N. மீரான்நன்றி கூற, கஃப்ஃபாரா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
திரளான உறுப்பினர்கள்:
அனைத்து நிகழ்ச்சிகளிலும் மன்ற உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை, மன்ற நிர்வாகத்தினரும், துணைக்குழு பொறுப்பாளர்களும் விமரிசையாக செய்திருந்தனர்.
மஃரிப்தொழுகை:
கூட்ட இடைவெளியில், மஃகரிப்தொழுகை ஜமாஅத்துடன் (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர் ஜமில் அப்பா தொழுகையை வழிநடத்தினார்.
தேயிலை வடை விருந்துபசரிப்பு:
பொதுக்குழுவில் கலந்துகொண்ட அனைவருக்கும் கூட்டம், நிகழ்விடத்திலே தேயிலை வடைவிருந்துபசரிப்பு அளிக்கப்பட்டது
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்வாவின் முந்தைய பொதுக்குழுக் கூட்டம் செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மக்வா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |