காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த எம்.எச்.உவைஸ்னா லெப்பை - எம்.எஸ்.இப்றாஹீம் உம்மாள் தம்பதியின் மகள் ஓ.எல்.ஃபாத்திமா பர்வீன், ப்ளஸ் 2 தேர்வில் சிறப்புத் தேர்ச்சி (மெரிட்) அடிப்படையில், விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் 2010ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பாடப்பிரிவில் சேர்ந்தார்.
5 ஆண்டுகள் பயின்று முடித்துத் தேறிய அவருக்கு, 30.03.2016. அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது, தமிழ்நாடு எம்.ஜி.ஆர். பல்கலைக் கழக துணை வேந்தர் டாக்டர் கீதா லட்சுமி எம்.பி.பி.எஸ். மருத்துவருக்கான பட்டச் சான்றிதழை வழங்கினார்.
டாக்டர் ஓ.எல்.ஃபாத்திமா பர்வீன், காயல்பட்டினம் தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் பயின்று, 10ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 500க்கு 488 மதிப்பெண்களும், 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 1200க்கு 1156 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றதும், இச்சாதனைகளுக்காக அவருக்கு - தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் & இக்ராஃ கல்விச் சங்கம் இணைந்து நடத்திய சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை நிகழ்ச்சிகளின்போது பாராட்டுச் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டதும். குறிப்பிடத்தக்கது.
தகவல்:
S.O.ஷாஹுல் ஹமீத்
படம்:
சதக் இப்றாஹீம் |