Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:01:27 AM
சனி | 14 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1962, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0212:1715:3518:0519:21
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:23Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்17:01
மறைவு18:01மறைவு05:04
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0805:3406:01
உச்சி
12:12
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2418:5019:16
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17517
#KOTW17517
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஏப்ரல் 7, 2016
காயல்பட்டினம் தனியார் மழலையர் பள்ளி உள்ளிட்ட 3 பள்ளிகள் அங்கீகாரமற்றவை! அவற்றின் மாற்றுச் சான்றிதழ்களை போலியெனக் கருதி சேர்க்கை மறுக்கப்பட வேண்டும்!! மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அறிவிப்பு!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4251 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் தனியார் மழலையர் பள்ளி உட்பட - தூத்துக்குடி மாவட்டத்தின் 3 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் அங்கீகாரமற்றவை என்றும், அவற்றின் மாற்றுச் சான்றிதழ்களை போலியானவையாகக் கருதி சேர்க்கை மறுக்கப்பட வேண்டும் என்றும், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் பாத்திமா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,
புதுக்கோட்டை - பாளை மெயின் ரோடு - பி.ஆர்.ஆர். மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,
கோவில்பட்டி மகாத்மா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி
ஆகிய பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படுவதால் அவற்றை மூடிவிட ஆணையிடப்பட்டுள்ளது. இருப்பினும் இப்பள்ளிகள் அங்கீகாரம் பெற்றிடாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எனவே, இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் சேர்க்கைக்காக அணுகிடும்போது, அவர்கள் அங்கீகாரம் இல்லாத பள்ளியில் பயின்றதாக அம்மாற்றுச் சான்று (Transfer Certificate) போலியானது என பதிவு செய்து, சேர்க்கை மறுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மூடப்பட்ட இப்பள்ளிகளில் சேர்க்க வேண்டாம் என அறிவுறுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:..காயலின் மழலையர்பள்ளி உட்பட 3 ... அங்கீகாரமற்றவை.
posted by சாளை:M.A.K.முஹம்மத்இப்ராஹீம்ஸுஃபி. (காயல்பட்டணம்.) [08 April 2016]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 43448

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... ஹு.

புதிதாக பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க இருப்பவர்களுக்கு மிகவும் பிரயோஜனமானச் செய்தி.

இதை வாசித்த நாம் ஒவ்வொருவரும் இச்செய்தியை பிரதியெடுத்து பிற சமூக வலைதளங்களுக்கும் பரப்பினால் இத்தளத்தில் பார்காதவர்களுக்கும் இத்தகவல் சென்றடையும் . இன்ஷா அல்லாஹ்.

சாளை:M.A.K. முஹம்மத் இப்ராஹீம் ஸுஃபி.
காயல்பட்டணம் .
08/04/2016.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Vilack sma (kayalpattinam) [09 April 2016]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 43449

அன்று இருந்த பெரியவர்கள் எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் கல்விக்காக செலவழித்து மிகப்பெரிய பள்ளிக்கூடங்களை உருவாக்கினர் . ஆனால் இன்றோ கல்வியை வியாபாரமாக்கினர் . இதுபோன்ற அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தோன்றுவதற்கு வியாபார நோக்கமே காரணம் . பெற்றோர்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Seyed Lebbai (Kayalpatnam) [12 April 2016]
IP: 121.*.*.* Singapore | Comment Reference Number: 43497

வியாபார நோக்கத்துடன் நேற்றோ இன்றோ துவங்கப்பட்டதல்ல பாத்திமா நர்சரி பள்ளி. நமதூரின் முதல் நர்சரி பள்ளியான எல் கே கல்வி குழுமத்தின் காஹிரா நர்சரி பள்ளியை தொடர்ந்து 40 வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்டதுதான் பாத்திமா நர்சரி பள்ளி என்பது குறிப்பிடத்தகுந்தது. மிக குறைந்த கட்டணத்தில் நமதூர்பிள்ளைகளுக்கு அடிப்படை கல்வியை சிறந்த முறையில் அளிக்கும் ஒரே கல்விக்கூடம் இதுவாகும். இதனை அப்பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்களின் மூலமாகவே அறிந்து கொள்ளலாம். இதே பள்ளியிலேயே படித்து பெற்றோர்களாகி இன்று இப்பள்ளியிலேயே தம் பிள்ளைகளை படிக்கவைத்திருப்பவர்கள் குறை கூறாத நிலையில், இப்பள்ளியை பற்றி அறியாதவர்கள் விமர்சிப்பது முறையல்ல. பள்ளியின் வரலாற்றையும், செயல்பாட்டையும் தெரிந்து கொண்டு கருத்துகளை பகிர்வதும் , பிற சமூக வலைதளங்களுக்கு பரப்புவதுமே சிறந்தது. நமது மார்க்கம் நமக்கு காட்டி தந்த வழிமுறையும் அதுவே. அல்லாஹ் அனனத்தையும் அறிந்தவன். ஞானமிக்கவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved