கத்தர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், 08.04.2016 வெள்ளிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள - உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்களுக்கு அழைப்பு விடுத்து, மன்றத்தின் செயலாளர் எம்.என்.முஹம்மத் ஸுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கை:-
அன்பின் மன்ற உறுப்பினர்கள் மற்றும் கத்தர் வாழ் காயலர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
வல்ல அல்லாஹ்வின் பேரருளால், நமது கத்தர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர மற்றும் 26ஆவது பொதுக்குழுக் கூட்டம், இன்ஷாஅல்லாஹ் - வரும் 08.04.2016 வெள்ளிக்கிழமையன்று, 15.30 மணி முதல் 19.00 மணி வரை, கத்தர் BARWA CITY PARKஇல் குடும்ப சங்கம நிகழ்சியாக நடைபெறவுள்ளது.
பல்வேறு பொழுதுபோக்கு சிறப்பம்சங்களுடன் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிகளில், மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் அனைவரும் - இச்செய்தியையே அழைப்பாகக் கருதி, உங்கள் குடும்பத்தினருடன் தவறாமல் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
மேலதிக விபரங்களுக்கு, கீழ்க்காணும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்:-
முஹம்மத் லெப்பை: 5570 9972
முஹம்மத் முஹ்யித்தீன்: 5525 9606
ஹுஸைன் ஹல்லாஜ்: 3349 2265
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கத்தரிலிருந்து ஹுஸைன் ஹல்லாஜ் மூலமாக
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி - கத்தர் கா.ந.மன்றம்)
கத்தர் காயல் நல மன்றத்தின் முந்தைய (25ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |