அண்மையில் பெய்த வடகிழக்குப் பருவமழையால், சென்னை கடலூரில் பெருவெள்ளப் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, ஏராளமான தொண்டு நிறுவனங்கள் களமிறங்கி, நிவாரண மற்றும் மீள் கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டன. சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நலனுக்காக, உலக காயல் நல மன்றங்கள் மற்றும் தனியார்வலர்களின் ஒத்துழைப்புடன் - காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) மழைவெள்ள நிவாரணக் குழு - தனிப்பட்ட முறையிலும், பிற தொண்டு நிறுவனங்களுடன் இணைந்தும் களமிறங்கிப் பணியாற்றின.
இவ்வகைக்காக ஒத்துழைப்பளித்தோருக்கு நன்றி தெரிவித்து, KCGC மழை வெள்ள நிவாரணக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
KCGC யின் சென்னை வெள்ள நிவாரணப் பணிக்கு நிதி உதவி வழங்கிய நல் உள்ளங்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன்!!!.
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.
கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை மற்றும் அதனை தொடர்ந்து வந்த வெள்ள பாதிப்பில் தனது உடை, உறைவிடம், வியாபாரம் என அனைத்தையும் இழந்த இஸ்லாமிய மற்றும் இஸ்லாம் அல்லாத சகோதரர்களுக்கும் உதவும் வகையில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் KCGC- Kayalpatnam Chennai Guidance Centre அமைப்பின் மூலம் இதற்காக ஒரு நிவாரண குழு அமைக்கப்பட்டு கடந்த 3 மாதத்திற்கும் மேலாக பல்வேறு வகையான செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்ததை நீங்கள் அறிந்து இருப்பீர்கள் எல்லா புகழும் ஏக வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே!!!.
இவ்வகை பணிக்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் காயல்பட்டணம் மக்கள் , குவைத்தில் வசிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் Hong Kong வாழ் இந்திய இஸ்லாமிய அமைப்பினர்கள் இணைந்து சென்னை வெள்ள நிவாரண பணிக்காக ரூ.38,49,634(ரூபாய் முப்பத்து எட்டு லட்சத்தி நாற்பத்தி ஒன்பதாயிரத்து ஆறுனூற்று முப்பத்து நான்கு) ரொக்கமாகவும், பொருட்களாகவும் எம்மிடம் வழங்கினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
பெறப்பட்ட தொகை:
சதக்கா வகையில் ரூ. 33,57,134(ரூபாய் முப்பத்தி மூன்று லட்சத்து ஐம்பத்து ஏழாயிரத்தி நூற்று முப்பத்தி நான்கு),
ஜக்காத் வகையில் ரூ.4,92,500(ரூபாய் நான்கு லட்சத்து தொண்ணூற்று இரண்டாயிரத்து ஐநூறு)
ஆக மொத்தம் ரூ.38,49,634(ரூபாய் முப்பத்து எட்டு லட்சத்தி நாற்பத்தி ஒன்பதாயிரத்து அறனூற்று முப்பத்து நான்கு)
செலவுகள்:
உணவு, உடை மற்றும் நிவாரண பொருட்களாக ரூ.12,57,934 மற்றும் வாழ்வாதரங்களை சீரமைத்துக்கொள்ள உதவும் வகையில் 1773 நபர்களுக்கு ரொக்கமாக ரூ.25,91,700 ஆக மொத்தம் ரூ.38,49,634 மதிப்பில் நிதி உதவி செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!!!
இவ்வகைக்காக பெறப்பட்ட வரவு மற்றும் செலவுகள் அனைத்தும் சகோ.ஆடிட்டர் ரிபாய் தலைமையிலான KCGC வெள்ள நிவாரண குழு முழுமையாக சரிபார்க்கப்பட்டது.
இதற்காக ஆரம்பிக்கப்பட்ட KCGC Flood Relief Fund மற்றும் KCGC Flood Rehabilitation என்ற இரண்டு WhatsApp Group களும் இந்த மாதம் அதாவது மார்ச் 31-2016 வரை மட்டுமே உபயோகத்தில் இருக்கும். அதன் பிறகு இந்த இரண்டு குரூப்புகளும் முற்றிலுமாக கலைக்கப்படும்.
இது சம்பந்தப்பட்ட கணக்குகள் நன்கொடை வழங்கிய நபர்களுக்கு கணக்கு விபரங்கள் தேவைப்படும் பட்சத்தில் அவர்கள் தங்களுடைய ஈ மெயில் முகவரியை எமக்கு அனுப்பித்தந்தால் இன்ஷா அல்லாஹ் மேற்படி கணக்கு விபரங்களை உங்களுக்கு அனுப்பி வைப்போம் என்பதனை உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம். வஸ்ஸலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சொளுக்கு M.A.C.முஹம்மத் நூஹ்
(செயற்குழு உறுப்பினர், KCGC)
KCGC மழைவெள்ள நிவாரணக் குழு தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|