Re:... போக்குவரத்துக்கு...நிறுத்துவதெப்படி. posted byசாளை:M.A.K.முஹம்மத்இப்ராஹீம்ஸுஃபி. ( கோழிக்கோடு- கேரளா.)[25 March 2016] IP: 106.*.*.* India | Comment Reference Number: 43406
அஸ்லலாமு அலைக்கும் வரஹ்.... ஹு.
நம் நகரின் சாலைப்பணிகள் சம்பந்தமான நம்நகர்மன்ற (தலைவி-அதிகாரிகள்- கவுன்சிலர்கள்) என்று முத்தறப்பு செய்திகளை மீடியாக்கள் மூலமாக முன்பு நாம் வாசித்த போது "தரமான சாலைகள்" அமைய தடையாக இருப்பவர்கள் யார் என்பது நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்.
கடந்த இரண்டு வருடங்களாக நமதூரின் சில சாலைகளில் நான் வாகனத்தில் பயணிக்கும்போது
"தரமான சாலைகள்" அமைய தடையாக இருப்பவர்களுக்கெதிராக என் மனது பிரார்த்திக்க தோன்றும். பின்பு சற்று நிதானமாகி யா அல்லாஹ் !
இவர்களுக்கு ஹிதாயத்தை கொடு என்றும், நல்லவைகளை செய்யும் மனோநிலையையும் கொடு
என்றும் இவர்களுக்கு ஆதரவான துஆவை கேட்பதுண்டு.
அதற்கு காரணம் பாதிக்கப்பட்டவனின் துஆ விற்க்கும்
அல்லாஹ்வுக்கும் மத்தியில் எந்த திரையும் இல்லை என்பதாலும் நம் துஆவால் பிறர் பாதிக்கப்படக் கூடாதென்ற என்னமும்தான்.
"வழிகளில் தொந்தரவு தரக்கூடியவைகளை அகற்றுவதும் இறைநம்பிக்கையின ஒர் அம்சம்" இது போன்ற பூமான் நபி(ஸல்) அவர்களின் ஏராளமான பொன்மொழிகளை நம்மில் பலர் மறந்ததன் விளைவாகவே சாலைககளில் பிறருக்கு தொந்தரவு கொடுக்க கூடிய விததத்தில் வாகனங்களை நிறுத்தக்கூடிய அவலநிலை.
தன் வீட்டினுள் நடக்கும் சொளகர்ய குறைவை சீர்செய்ய முனைவது போல் வீதியில் ஏற்படும்
முறையற்ற போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த
A L S மாமா அவர்கள் தன் முதிரந்த வயதிலும் இந்த கட்டுரையை நமக்கு தந்திருப்பதை பார்க்கும்போது
மாமாவின் சமூக முன்னேற்ற என்னம் என்றும் பதினெட்டு வயது தாண்டாமலேயே நிலையாகவுள்ளது. மாஷா அல்லாஹ்.
இந்த ஆக்கத்தின் ALS மாமா அவர்களுக்கும்,
இதனை வெளியிட்டுள்ள இவ்விணையதள
சகோதரர்களுக்கும்.. ஜஸாக அல்லாஹு க்ஹைரா.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross