Re:... வாப்பா...! கொஞ்சம் பேசக்கூடாதா? posted byசாளை:M.A.K.முஹம்மத்இப்ராஹீம்ஸுஃபி. (காயல்பட்டணம்.)[06 April 2016] IP: 106.*.*.* India | Comment Reference Number: 43443
அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ்...ஹு.
வாப்பா...!கொஞ்சம் பேசக்கூடாதா..?!
இந்த ஆக்கத்தின் இடையிடையே பதித்துள்ள போட்டோக்களை பார்த்துக் கொண்டிருக்கும் போதே
என் ஞாபகத்திற்க்கு வந்தது நான் விடுமுறைகளில்
என் குழந்தைகளை கடலின் அலைக்கரைக்கு
அழைத்துச் சென்று பிஞ்சு குழந்தைகளின்
பஞ்சு பாதங்களை தொடர் அலைகளால்
முத்தமிடச் செய்ததும், பந்தாட்டம்,கபடி,நொண்டியடித்து ரட்டாங்கோடு, கண்கட்டி தேடுவது, யுனொ கார்ட் போன்ற விளையாட்டுக்களை விளையாடினவைகள்தான் ஞாபகம் வந்தது.இவர்களோடு விளையாடும் இவ் விளையாட்டுக் களில் மிக அதிகமாக நான் தோற்று அவர்களின் வெற்றியை ரசிப்பதுண்டு.
மிகச் சில சமயங்களில்
அவர்களைத் தோற்க்கடித்து தோல்வியைும் தாங்கிக் கொள்ளும் மனவலிமையையும் அவர்களுக்கு
புகட்டுவதுமுண்டு. அல்ஹம்துலில்லாஹ்.
நிகழ்கால வாப்பாக்களில மிகச்சிலர் தன்னை சுற்றி சுற்றி
வந்து பாசத்திற்க்காக ஏங்கும் தன் குழந்தைகளின் மனநிலையை அறிந்து அவர்களுக்கு
அன்பு காட்டுவதில் வீழ்ச்சி அடைந்தும்;
கடல் கடந்து கரை கடந்து நேரில் பார்த்திராத
யாரோ ஒருவரின் மனநிலை புரிந்துஅவர்களிடம்
அன்பு காட்டுவதில் எழுச்சிஅடைந்திருக்கும்
வாப்பாக்கள் இந்த ஆக்கத்தை வாசித்த பின்பாவது தங்கள் அறியாமையை திருத்திக் கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. இன்ஷா அல்லாஹ்.
இன்றைய குழந்தைகள் நாளை விபரம் அறிந்த
பருவத்தில் அல்குர்ஆனின் ஒளியில் கீழ் காணும்
துஆ வை கேட்கும் போது (*நான் சிறு.... போல்*)
என்ற வரிகளை கூர்ந்து சிந்தித்து நினைவில் வைத்தால் குழந்தைகளோடு நம் அன்பு பெறுகும்.
அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்றஜீம்.
وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே!
*நான் சிறு பிள்ளையாக இருந்த போது,என்னை(ப்பரிவோடு)அவ்விருவரும் வளர்த்தது போல்,*"
நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!”
என்று கூறிப் பிரார்த்திப்பீராக!
(அல்குர்ஆன் : 17:24) .
இக்காலத்திற்கு தேவையான இந்த ஆக்கத்தை
அழகிய தமிழில் செதுக்கியிருக்கும்
S.I. புஹாரி காகா அவர்களுக்கும்,
இதை வெளியிட்டுள்ள இவ்விணையதளச் சகோதரர்களுக்கும் ஜஸாகல்லாஹு க்ஹைரா.
காயல்பட்டணத்திலிருந்து
சாளை:M.A.Kமுஹம்மத்இப்றாஹீம் ஸுஃபி.
06 ஏப்ரல் புதன் 2016.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross