Re:...மண்ணின் மைந்தருக்கு வாழ்த்துக்கள் posted bymackie noohuthambi (kayalpatnam )[14 April 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43513
சகோதரர் அபூபக்கர் அவர்கள் கடையநல்லூர் தொகுதி வேட்பாளராக முஸ்லிம் லீக் கட்சியினால் அறிவிக்கப் பட்டுள்ள செய்தி தேனாக இனிக்கிறது.
ஆனால் அதே கடையநல்லூர் தொகுதியில் அவரை எதிர்கொள்பவராக ஷேக் தாவூத் என்பவர் அனைத்திந்திய அண்ணா திமுகவினால் களம் இறக்கப் பட்டிருக்கிறார் என்ற செய்தியும் SDPI என்ற மற்றொரு இஸ்லாமிய கட்சியின் வேட்பாளரும் இப்போது அறிவிக்கப் பட்டிருக்கிறார் என்ற செய்தியும் தேளாக கொட்டுகிறது.
ஷேக் தாவூத் என்பவர் ஒரு போலி முஸ்லிம் லீக் கட்சியை ஆரம்பித்து அம்மாவின் ஊது குழலாக இருக்கிறார் என்பதை சமீபத்திய தொலைக் காட்சி பேட்டிகளில் அவர் மலர்ந்தருளிய காமெடி பேச்சுக்கள் முஸ்லிம் மக்களுக்கு அவரை இனம் காட்டியது. அவரை ஒரு பொருட்டாக முஸ்லிம்கள் மதிக்கவில்லை. ஆனால் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இடம் பெற்று முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகமாக்கும் ஒரு இயக்கமாக SDPI கட்சியை முஸ்லிம்கள் பார்த்தார்கள் ஆனால் அது கைகூடாமல் போனது துரதிர்ஷ்டமே.
கடையநல்லூர் போன்ற தொகுதியை அவர்கள் தேர்ந்தெடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தியிருப்பது வருத்தமளிக்கிறது. அந்த அறிவிப்பை அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்த சமுதாயத்தில் உள்ள கட்சி சார்பற்றவர்கள் சமுதாய நலம் விரும்பிகள் ஆசைப் படுகிறார்கள்.
முஸ்லிம்களே முஸ்லிம்களை எதிர்த்து நின்றால்....
மங்கை சூதகமானால் கங்கையில் நீராடலாம் கங்கை சூதகமானால் எங்கே நீராடுவது.
இதயம் கனக்கிறது. அல்லாஹ்வின் நாட்டமின்றி எதுவும் நடக்காது. அல்லாஹ் மிக தெளிவாக அவனது திருமறையில் சொல்கிறான்
VA ATHEEULLAAHA VA RASOOLAHOO VALAA THANAAZAOO FA THAFSHALOO VA THAT'HABA REEHUKUM VASBIROO INNALLAAHA MA'AS SAABIREEN
மரியாதைக் குரிய தெஹ்லான் பாக்கவி அவர்களுக்கு இதன் அர்த்தம் நன்றாகவே தெரியும்
இந்த தேர்தல் களத்தின் வியூகம் அம்மா அவர்களின் கபடம் நன்கு புரியும். திமுக இன்னும் ஒரு இடம் தந்து உங்களையும் அரவணைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஏனோ அவர்களுக்கு ஒரு நிர்பந்தம் கட்டாயம் அவர்களை உங்களிடமிருந்து பிரித்து விட்டது வருத்தமாகவே இருக்கிறது.
உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள். மாற்று மத்தது சகோதரர்கள் நம்மை எதிர்த்து நிற்பதை நாம் எதிர்கொள்ள வேண்டிய களத்தில் நம்மை நாமே எதிரிகளாக காட்டிக் கொள்வது அறிவுடைமை ஆகாது. அல்லாஹ் நாடியவர்களுக்கு வெற்றியை கொடுப்பான் என்பதுதான் ஹகீகத்து.
நமது மண்ணின் மைந்தர் சகோதரர் அபூபக்கர் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross