பாடுபட்ட பாட்டனார்! posted byS.K.Salih (Kayalpatnam)[16 April 2016] IP: 180.*.*.* India | Comment Reference Number: 43533
அன்பு மருமகன் சுல்தான் ராஷித் உடைய மருத்துவர் பட்டமளிபபு விழாவிற்கு, குடும்பத்தாருள் ஒருவனாக நானும் சென்றேன். அனைத்து நிகழ்ச்சிகளும் அருமையாக அமைந்திருந்தன.
குறிப்பாக, முஸ்லிம் மருத்துவ மாணவர்களை அருகிலுள்ள இகாமா சென்டரில் ஒன்றுகூட்டி, அவர்களுக்கு - மதமாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்ட மருத்துவ சேவை, சேவையே அழைப்புப் பணியாக ஆக்கிக்கொள்ளல், மனித நேயம் உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தி, உறுதிமொழியும் பெற்றுக்கொண்டது மிகச் சிறந்த முன்மாதிரியாகும்.
மருமகன் சுல்தான் ராஷித் இன்று மருத்துவராக மிளிர்கிறார் என்றால், இதன் அஸ்திவாரம் அவரது பாட்டனார் எனது பெருமதிப்பிற்கும், அன்பிற்குமுரிய பீர் மாமா அவர்கள்.
இவர் ப்ளஸ் 2 தேர்வு எழுதிய நாள் தொட்டு, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்றது வரை - தன் வாழ்நாள் முழுக்க இவருக்காக சிறுபிள்ளை போன்று ஓடியோடிப் பணியாற்றினார்கள். அவர்களது இவ்வுலகின் கடைசி நாளும் இவர்களுடனான சந்திப்பிற்குப் பின்பே நிறைவடைந்துள்ளது என்பதிலிருந்து இதைப் புரிந்துகொள்ளலாம்.
இன்று இவர் மருத்துவர் என்ற பட்டத்தைப் பெறும் இச்சூழலில் மாமா அவர்கள் நம்முடன் நேரிலிருந்து பார்க்கும் நிலையிலில்லை.
இவர்களது குடும்பத்தைப் பொருத்த வரை, பணத்தை அடிப்படையாக வைத்து இவரை மருத்துவராக்க முனையவில்லை. உயர்ந்த பட்டப்படிப்பு - அதன் மூலம் நிறைவான மக்கட்சேவை - இதுவே இவர்களின் எதிர்பார்ப்பும் ஏக்கமுமாக உள்ளது.
இப்படியாக, அன்பு மருமகனே! உனது பாட்டனார், இன்றளவும் உனது நலனில் அக்கறை கொண்டு அரும்பணியாற்றி வரும் உன் தாயார், தாயாரின் தாயார், தாய்மாமாமார் உள்ளிட்ட உன் குடும்பத்தாரின் மகத்தான எதிர்பார்ப்பு உனது மருத்துவச் சேவை வழியே நிறைவாக வெளிப்பட வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross