செய்தி: அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் மாற்றம்: சண்முகநாதனுக்கு மீண்டும் ஸ்ரீவைகுண்டம் தொகுதி ஒதுக்கீடு! தமிழ் மகன் உசைனுக்கு வழங்கப்பட்ட பாளையம்கோட்டை தொகுதி பறிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பார்வையற்றோர் தேசத்தில் ஒற்றைக்கண்ணனே மன்னன் posted bymackie noohuthambi (kayalpatnam )[18 April 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43545
ரிசர்வ் வங்கி ரகுராம் ராஜன் சிலதினங்களுக்கு முன் அமெரிக்காவில் பேசினார்.''பார்வையற்றோர் தேசத்தில் ஒற்றைக் கண்ணனே மன்னன்'' என்றார். அவர் பேசியது நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றியது.
ஆனால் நமது தமிழக அரசியலுக்கும் அது பொருந்தி வருகிறது. வேட்பாளர்களை அறிவித்து 234 இடங்களிலும் இரட்டை இலை துளிர்விடும் என்ற ஆவலையும் தைரியத்தையும் பொது மக்கள் இடையே ஏற்படுத்தி புயலென்று புறப்பட்ட அம்மா அவர்கள் ஒவ்வொரு நாளும் வேட்பாளர்களை மாற்றுவதும் பந்தாடுவதுமாக இருக்கிறார்.அவர் அப்படி குழம்பிபோய் இருப்பது இரட்டை இலையில் பூச்சி கடிக்கிறதோ என்ற சந்தேகத்தை கிளப்பி உள்ளது.
இது இப்படி இருக்க கலைஞருக்கும் அப்படி ஒரு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. தேமுதிக மக்கள் நலக் கூட்டணி செய்த மாயையோ என்று எண்ணத் தோன்றுகிறது. மனித நேய மக்கள் கட்சி தனக்கு தரப்பட்ட தொகுதிகளில் ஒன்றை மீண்டும் திமுகவிடமே தாரைவார்த்துக் கொடுத்திருக்கிறது. முஸ்லிம்களை எதிர்த்து முஸ்லிம்களே களம் காணும் கடையநல்லூர் நாகப்பட்டினம் தொகுதிகளும் நமது கனவுகளை கலைத்து வருகிறது. ''சீட்டுக்கு கூட்டு நோட்டுக்கு வோட்டு இலவசங்கள் என்ற அவலங்களுடன் அரசியல் கட்சிகள் - காமராஜர் ஆட்சி என்றவர்கள் விஜயகாந்தை முதல்வராக்குவோம் என்று களத்தில் இறங்கியுள்ளார்கள்.
ஒன்றும் புரியவில்லை தம்பி
எனக்கு ஒன்னும் புரியவில்லை தம்பி
கண்ணு இரண்டும் சுத்துது காதை அடைக்குது
மே 16 என்ன முடிவை தரப்போகிறதோ தெரியவில்லை
தமிழகத்தை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்..
முட்டாள் பயல் ராஜ்யத்தில்
மூளை உள்ளவனுக்கு வேலை இல்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross