நன்றியுடைய காயல் கண்மணிகள்!. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[26 April 2016] IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 43633
நேற்று தளபதி ஸ்டாலின் அவர்களும்,அனிதா அண்ணாச்சி அவர்களும் காயல் பெருவீத்யில் உலா வந்திருளிறார்கள் அவர்களுக்கு அன்பு காயல் கண்மணிகள் உற்சாகமாக வரவேற்ப்பு அளித்திருக்கிறீர்கள்.
இதில் கவனிக்க வேண்டியது என்ன வெனில் அனிதா அண்ணாச்சி அவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியை சார்ந்தவர் என்ற அடிப்படையில் அல்ல,அதை தாண்டி நம் சமுதாயத்திற்கு, அதுவும் சிறுபான்மை சமுதாயமாகிய இஸ்லாமிய சமுதாயத்திற்கு தாராளமாக தொகுதிகளை அள்ளிக்கொடுத்து அழகு பார்க்கும் ஒரு இயக்கத்தின் மகன் அந்த இயக்கத்தின் சார்பாக நம்மிடம் வந்து வாக்கு கேட்கும் பொழுது,
உண்மையான முஸ்லிம்கள் நாங்கள் அதோடு நன்றிமறவா நெஞ்சத்திற்கு சொந்தகாரர்கள் நாங்கள்.எங்கள் நன்றியின் எழுச்சி பீறீட்டால் உங்களை உள்ளம் குளிர வரவேற்கிறோம் என்ற மனசாட்சியுடைய சபதத்துடன சிறப்பான வரவேற்ப்பை அளித்துருக்கிறீர்கள்.அல் ஹம்திலில்லாஹ்! இதுதான் நடுநிலை நம்மின மக்களின் நன்றியின் வெளிப்பாடு மட்டுமல்ல நம்மை படைத்து பரிபாலிக்கும் வல்ல இறையோனும் ஏற்றுகொண்ட ஏற்றமிகு நன்றியுணர்வின் நிகழ்வாகும்! .
நாம் ஆதரிக்கும் இந்த அணியை எதிர்த்து பல வேட்பாளர்கள் உங்களிடம் ஒட்டு கேட்க வந்திருக்கிறார்கள், வருவார்கள்.ஒரு நடிகை கூட வந்ததாக அறிந்தேன்.அவருக்கும் கூட்டம் கூடியது என்று சொன்னார்கள் அந்த கூட்டம் எதற்கு வந்திருக்கும் என்பதை நீங்களே அறிவீர்கள்.இன்னும் பல நடிகைகள் கூட வரலாம்.அண்மையில் இன்னுமொரு அமீதா அம்மா அவர்கள் கூட எதிர் அணியில் இணைந்திருக்கிறார்
( மச்சான்களே மறந்திடாதீங்கோ என்ற பாணியில்தான் நமீதா அவர்கள் மற்றவர்களைப்பார்த்து விளம்பரத்தில் வசனம் பேசும் வழக்கமுள்ளவர்.அதைத்தான் கிளுகிளுப்புடன் கேட்பதற்காக துடித்துக் கொண்டிருக்கிறோம், இந்த நேரத்தில் இன்னொரு அம்மா என்று பெயர் சூட்டி எங்கள் பேரானந்தத்தில் பேரிடியை கொடுக்க எண்ணுகிறான இந்த ஆதம் சுல்தான் என்று என்னை மனதால் சபிப்பவர்களுக்காக மன்னிப்பு கேட் டு கொள்கிறேன்)
அன்பு காயல் கண்மணிகளே கட்டுக்கோப்பான, உணர்வுபூர்வமான உள்ளம் மகிழும் வரவேற்ப்பை கொடுத்ததோடு மட்டும் நின்றுவிடாமல் அத்தனை அன்புள்ளங்களும் அதே உற்சாகத்தோடு உங்கள் பொன்னா வாக்குகளை உதய சூரியன் சின்னத்தில் முத்திரைபதித்து வெற்றிக்கனியை கொய்தளிக்குமாறு வேண்டுகிறான். அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross