செய்தி: ஜாமிஉல் அஸ்ஹரில், CMN ஸலீம் நடத்திய “பொற்காலம் திரும்பட்டும்!” கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மிக அருமையான நிகழ்ச்சி posted bymackie noohuthambi (kayalpatnam )[02 May 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43665
முன்னெப்போதும் கேட்டிராத செய்தி தொகுப்புக்கள் நீள் திரையில் தக்க சான்றுகள் ஆதாரங்களுடன் விளக்கப்படங்கள். ஒரு ஆவண திரைப் படம்போல் இருந்தது.
ஜனாப் சலீம் அவர்களின் தமிழ் உச்சரிப்பு அழுத்தமான கல்வி சிந்தனை - முஸ்லிம்கள் கோலோச்சிய காலங்கள் இப்போது ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் இனிமேல் மீண்டும் நமது பாரம்பரியத்தை வெற்றியை வென்றெடுக்க நாம் மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் கல்வி முறை மாற்றங்கள் எல்லாம் மிக தெளிவாக இருந்தது. மார்க்கக் கல்வியில் ஏற்பட்ட பின்னடைவு குர் ஆன் ஹதீத்களின் அடிப்படையில் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை அந்த இரண்டையும் தங்கள் வாழ்வியலுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் மையமாக கொண்டது எல்லாமே அவர்கள் உரையில் தெளிவாக இருந்தது. வியாபாரிகளாக இருந்த நமது சமுதாயம் வேலைக் காரர்களாக கூலியாட்களாக மாத சம்பளம் வாங்குபவர்களாக மாறிய இழி நிலையையும் அதே நேரம் மலையாளிகள் இதேபோல் வெளிநாடு சென்று கூலிவேலை மாத சம்பளம் என்று வாங்கினாலும் அவர்கள் சிந்தனைகள் எல்லாம் தொழில் அதிபர்களாக மாறவேண்டும் என்று இருந்தது அப்படியே மாறினார்கள் என்பதையும் விளக்கமாக சொன்னார்கள்.
பெண்கல்வி பற்றி பேசிய அவர்களிடம் நாம் கேட்க நினைத்த ஒரு கேள்வி - அது ஒரு மில்லியன் டாலர் கேள்வி என்பதால் அதை கேட்பதை தவிர்த்துக் கொண்டோம். பெண்கள் எவ்வளவுதான் அவர்கள் சொல்லும் கல்வியை கற்றாலும் கற்க முனைந்தாலும் அவர்களுக்கு திருமணம் ஆனவுடன் அந்த கனவுகள் கலைந்து விடுகின்றன.வெளிநாட்டிலோ அல்லது உள்நாட்டிலோ பணிபுரியும் கணவன் அவளை தன்னுடன் அழைத்துக் கொண்டு அங்கு சென்று அவள் அங்கு இல்லாளாக இருப்பதையே ஆசைப் படுகிறான் தொடர்ந்து குழைந்தைகள் பெற்று அவர்களை கண்ணும் கருத்துமாக கவனித்து வரும் சூழ் நிலையில் சலீம் அவர்கள் சொல்லும் கல்வி கடற்பதை அவளால் முன்னெடுத்து செல்ல முடியவில்லை. மாற்று சமுதாயத்தினருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தினருக்கும் இந்த விஷயத்தில் வேறுபாடு உள்ளது. சில நிதர்சன உண்மைகளை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கவும் முடியாது தவிர்த்து விடவும் முடியாது.
அடுத்து தொழில் செய்பவர்கள் அந்த காலத்தில் வக்ப் செய்தார்கள் அல்லாஹ்வுக்காக வாரி வழங்கினார்கள். ஆனால் இன்று தொழில் செய்பவர்களை விட மாத சம்பளம் வாங்குபவர்கள்தான் நல்ல விஷயங்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கிறார்கள். பல தொழில் அதிபர்கள் கூட, இப்போது வியாபாரம் சரி இல்லை, கொள்முதல் செய்த சரக்குகள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கிறது. வரவேண்டிய பணங்கள் வரவில்லை கொடுக்கல் வாங்கல்களில் சிக்கல் என்று பல சாக்கு போக்குகள் சொல்லி தங்களுக்குள்ள தர்ம சங்கடமான நிலையை சொல்லி தப்பித்து கொள்கிறார்கள்
எது எவ்வாறாயினும் சலீம் அவர்களின் ''பொற்காலம் திரும்பட்டும்'' என்ற நிகழ்ச்சி பலரின் சிந்தனைகளுக்கு விருந்தாகவும் நாம் இழந்த பழைய பொற்காலத்தை மீண்டும் பெற நாம் நம்முடைய சிந்தனைப் போக்கை கல்வி முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற தாக்கத்தை நம்மிடையே ஏற்படுத்தியுள்ளது.மாணவர்கள் இளைஞர்கள் சிந்தித்தால் மாற்றங்கள் சாத்தியமாகும் என்பதில் சந்தேகமில்லை. .
மாற்றம் ஒன்றுதான் மாறாதது.
நிகழ்ச்சியை சிறப்பாக அமைத்து தந்த அமைப்பாளர்களுக்கும் சகோதரர் சலீம் அவர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross