காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில், “பொற்காலம் திரும்பட்டும்!” எனும் தலைப்பில், கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி - இன்று 17.00 மணியளவில் நடைபெற்றது.
பள்ளியின் தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ தலைமையேற்க, துணைத்தலைவர்களான டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், எஸ்.இப்னு ஸஊத், முன்னாள் தலைவர் எஸ்.ஐ.தஸ்தகீர் ஆகியோர் முன்னிலை வகிக்க, தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் அமைப்பின் நிறுவனர் சி.எம்.என்.ஸலீம் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இன்றைய கல்வி முறைகளில் நிலவும் குழப்பங்கள், அதனால் ஏற்படும் மனிதவள மேம்பாட்டுத் தடைகள், இவற்றுக்கு இஸ்லாம் கூறும் தீர்வு, நபிகளார் வடிவமைத்தளித்த பாடத்திட்டம் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கி அவரது உரை அமைந்திருந்தது.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். மகளிருக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|