காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
மே 3, 2001 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 98]
வியாழன், மே 3, 2001
கருணாநிதி உரை முழு விபரம்!
செய்தி: மாஸ்டர் கம்ப்யூட்டர்
காயல்பட்டினத்துக்கு வரும் போது அண்ணன் - தம்பியை காணும்உணர்வு ஏற்படுகிறது - கருணாநிதி பேச்சு
காயல்பட்டினத்திற்கு வரும் போது அண்ணன் தம்பியை காணும் உணர்வு ஏற்படுகிறது என்று காயல்பட்டினத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி பேசினார்.
நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு ஸ்ரீவைகுண்டம் வழியாக காயல்பட்டினம் வந்தார். அங்கு திருச்செந்தூர் தொகுதி வேட்பாளர் ஜெனிபர் சந்திரனை ஆதரித்து கருணாநிதி பேசியதாவது.
வருகிற 10ந் தேதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளர் ஜெனிபர் சந்திரனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு வந்துள்ளேன். உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது ஆச்சிரியமான விஷயம் அல்ல. இங்கு சந்திக்காவிட்டாலும், சென்னையிலோ அல்லது வேறு இடங்களிலோ உள்ள காயல்பட்டின சொந்தக்காரர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் என்றால் அதில் காயல்பட்டினம் இடம் பெறாவிட்;டால் அந்த பயணம் முழுமையாக அமையாது. இங்கு வரும் போதுதான் அருமையான தாய்மார்களையும், அண்ணன், தம்பிகளையும் காணுகிற உணர்வு ஏற்படுகிறது. நான் 15 ஆண்டுகளுக்கு முன்பு வந்த போது எந்த அன்பை காட்டினீர்களோ அதே அன்பை காட்டி வருகிறீர்கள். இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கை காங்கிரஸ்காரர்களும், கம்யூனிஸ்டுகாரர்களும் வகுப்பு வாத இயக்கம் என்று சொல்லிய காலம் உண்டு. அந்த காரணத்தைக் காட்டி முஸ்லிம் லீக் பங்கு பெறும் கூட்டங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கலந்து கொள்ளாத காலத்தில் தோளோடு தோளாக நின்ற இயக்கம் தி.மு.க. என்பதை அறிவீர்கள்.
இன்றைக்கும் சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்கள் என்று நீலிக்கண்ணீர் வடிப்பவர்களை கேட்கிறேன். தி.மு.க.வில் தான் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த 9 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர். மற்ற கூட்டணியில் 3 இடங்கள் கூட கொடுக்கவில்லை. அந்த கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கூட பெரும்பாடுபட்டு ஒரு இடத்தைத்தான் பெற்றது. ஆனால் நாங்கள் தமிழக ஐக்கிய ஜமாத்துக்கு 3 இடங்களும், தி.மு.க.சார்பில் 6 இடங்களும் முஸ்லிம் சமுதாயத்திற்கு கொடுத்து உள்ளோம்.
ஏதோ பாரதீய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்த காரணத்தினால் நாங்கள் மதசார்பற்ற தன்மையை விட்டு விட்டோம் என்ற தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. நாங்கள் இருக்கிற எந்த இடத்திலும் மதவாதம் தலைதூக்காது. உங்களுக்கும், எனக்கும் விரோதம் ஏற்படுத்த பல குள்ளநரிகள் பிரசாரத்தில் நட்பல்ல உறவு என்றும் தொடர என்னோடு ஒத்துழைக்க கேட்டுக் கொண்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
|