தமிழக சட்டமன்றத் தேர்தல், 16.05.2016. அன்று நடைபெறவுள்ளது. இதில், அதிமுக கூட்டணி சார்பில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு கோரி, நடிகர் குண்டு கல்யாணம் தமிழகமெங்கும் பரப்புரை செய்து வருகிறார். காயல்பட்டினத்திற்கு இன்று நண்பகல் 12.00 மணியளவில் வருகை தந்த அவர், பிரதான வீதியில் - வள்ளல் சீதக்காதி திடலையொட்டி வாகனத்தில் நின்றவாறு பரப்புரையாற்றினார்.
![](/newsimg/45201664615.jpg)
![](/newsimg/45201664630.jpg)
![](/newsimg/45201664640.jpg)
![](/newsimg/45201664650.jpg)
அதிமுக நகர செயலாளர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகளும், அங்கத்தினரும், பொதுமக்களும் இதன்போது திரண்டிருந்தனர்.
|