Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:13:20 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17697
#KOTW17697
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மே 6, 2016
புகாரி ஷரீஃப் 1437: 27ஆம் நாள் நிகழ்வுகள்! அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்...
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2149 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 89ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 07.04.2016. வியாழக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.

ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.

மே 05 அன்று 27ஆம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ நிகழ்த்தினார்.

ரஜப் 28ஆம் நாள் (மே 06) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, ‘முத்துச்சுடர்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டீ.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ, அல்ஜாமிஉல் கபீர் பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும் முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ ஆகியோர் வழங்கவுள்ளனர்.

ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.

மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1436ஆம் ஆண்டு (கடந்தாண்டு) 27ஆம் நாள் நிகழ்ச்சிகள் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1437ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...தொழுகை தொழுகை தொழுகை
posted by mackie noohuthambi (kayalpatnam ) [06 May 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43682

ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் மஹ்லரி அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக. புனித மிராஜ் தினத்தில் அவர்கள் ஆற்றிய உரை மிகவும் சிறப்பாக இருந்தது.

முதலாவது, அவருக்கு கொடுக்கப்பட்ட தலைப்புக்குள் நின்று பேசினார். அன்று ஓதப்பட்ட மாநபி மொழிகளிலிருந்து மேற்கோள் காட்டி பேசினார். பொதுவாகவே பேச்சாளர்கள் புகாரி ஷரீபில் பேசுபவர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது உலகின் பலநாடுகளிலிருந்தும் அவர்கள் பேச்சை பல்லாயிரக் கணக்கான பேர்கள் இணையத்தளம் மூலம் கேட்கிறார்கள்.

89 ஆண்டுகளை கடந்து நிற்கும் ஒரு பாரம்பரியம் மிக்க மஜ்லிஸில் 45 நிமிடங்கள் பேசக் கிடைப்பதே ஒரு பாக்கியம். ஆனால் சிலர் பேசும்போது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் பேசுவது, அன்று ஓதப் பட்ட நபி மொழிக்கும் இவர் பேச்சுக்கும் தொடர்பில்லாமல் அந்த நேரத்தை வீணடித்த நிகழ்ச்சிகளை எல்லாம் எனது சக நண்பர்கள் என்னிடம் கூறி வருத்தப் பட்டுக் கொண்டார்கள். அவர்கள் சொல்வதில் உண்மை நியாயம் இருக்கிறது என்பதை நானும் உணர்ந்தேன்.

உலமாக்களை தேர்வுசெய்யும் குழு ஒன்று முன்பு இந்த சபையில் இருந்தது. அவர்கள் மிக நேர்த்தியாக இந்த விஷயத்தை கையாண்டார்கள். காலப் போக்கில் முஹல்லாவில் எல்லா ஆலிம்களுக்கும் புதிய, இளைய தலைமுறைக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற அபிலாஷை ஏற்பட்டதில் தவறில்லை. ஆனால் அவர்கள் அன்று பேச வேண்டிய தலைப்பிலிருந்து அவர்கள் திசை திரும்பி பேசும்போது அவர்களை நல் வழிப்படுத்த வேண்டியது உலமாக்கள் சபைதான். அதுவும் இப்போது உலகம் முழுவதும் இந்த 30 நாள் நிகழ்ச்சிகளும் நேரலையில் ஒளி பரப்பப் படுகிறது.பேச்சாளரைக் குறை சொல்வதுடன் உலமாக்கள் சபையையும் குறை சொல்வார்கள் கவனித்துக் கொள்ளுங்கள்.

அடுத்து ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் அவர்கள் நபிகள் நாயகம் மிஉராஜுக்கு சென்று வந்த பிறகு மூமின்களுக்கு அதே மிராஜ் தொழுகை என்று சொன்னதை சபையில் பதிவு செய்தார்கள். நம்முடைய தொழுகை எப்படி இருக்கிறது என்பதையும் சொன்னார்கள். குறிப்பாக நமது பெண்கள் திருசெந்தூருக்கு துணிமணி எடுக்க சென்றாலும் நெல்லை தூதுக்குடி என்று சென்றாலும் அவர்கள் தொழுகை எல்லாம் ஒத்தி வைத்துவிட்டு இரவு வீட்டுக்கு வந்து மொத்தமாக தொழுகிற காட்சியை பார்க்கிறோம். ஆண்களும் அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள், பெருநாளைக்கு துணி மணி எடுக்க போகிறவர்கள் நோன்பு திறக்க அந்த கடைகளில் தரும் ஈத்தப் பழம் குளிர்பானத்தை வைத்து நோன்பு திறந்து விட்டு மீண்டும் துணிமணி வாங்கும் பணியை தொடர்கிறார்கள். மக்ரிப் தொழுகை களாவாகி விடுகிறது.

சில ஊர்களில் பேருந்து நிலையம் அருகே பள்ளிவாசல்கள் இருந்தும் பெண்கள் நினைத்தால் அங்கு சென்று தொழுக முடியாமல் தடுத்து நிறுத்தப் படுகிறார்கள்.அதன் காரணத்தாலும் அவர்கள் தொழுகை களாவாகி விடுகிறது. இலங்கை போன்ற பௌத்த நாடுகளிலும் கூட பெண்கள் தொழுவதற்கு விசேஷ ஏற்பாடுகள் இட வசதிகள் செய்யப் பட்டுள்ளது. நமது நாட்டிலும் அப்படி இருக்கிறது. ஆனால் நமதூர் போன்ற உலமாக்கள் நிறைந்த ஊரில் தொழுகை பற்றி அதிகமதிகமாக அதன் கட்டாயம் வலியுறுத்தப் படுகிற நமது ஊரில் பேருந்து நிலையம் அருகில் உள்ள செய்யத் ஹுசைன் பள்ளிவாசலில் கூட அந்த வசதி இல்லை. உலமாக்கள் இந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது ஹபீபுர் ரஹ்மான் அவர்களின் பிரசங்கத்திலிருந்து நாம் பெற வேண்டிய பாடம். பெண்கள் இதை ஒரு குறையாகவே என்னிடம் சொன்னார்கள்.

இந்த சிறப்பான மஜ்லிஸில் நாம் எதை எல்லாம் கேட்டோமோ அதன்படி செயல்பட அல்லாஹ் தவ்பீக் செய்வானாக. மீதியுள்ள நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளும் சிறப்பாக அமைந்து இறுதி நாள் து ஆ பிரார்த்தனைகளை எல்லாவற்றையும் அல்லாஹ் கபூல் செய்வானாக. இந்த புகாரி ஷரீபின் நாயகர் இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் து ஆ பரக்கதாலும் நபிகள் நாயகம் அவர்களின் நல்லாசியாலும் நமதூரும் நமது மக்களும் எல்லா வளமும் பெற்று அல்லாஹ்வின் திருமறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் வழிமுறை இவற்றை பின்பற்றி வாழும் நல் பாக்கியத்தையும் தந்தருள்வானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நீ போயிடு பாப்போம்! (?!)  (4/5/2016) [Views - 2920; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved