காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
மே 5, 2001 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 101]
சனி, மே 5, 2001
திருக்குர்ஆன் மனனப்பிரிவு துவக்க நிகழ்ச்சி
செய்தி: மாஸ்டர் கம்ப்யூட்டர்
இன்று 5-5-2001 சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு அல்ஜாமிவுல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித்தில் "அல்அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவு" துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஜனாப் மீரா சாகிப் M.A.,B.L., வழக்கறிஞர், சென்னை உயர்நீதி மன்றம், அவர்கள் தலைமை தாங்கினார்கள். மௌலவி கண்டி முஹம்மத் நூஹ் மஹ்லரி - காயல்பட்டினம், மௌலவி அலீ ரஹ்மானீ - மேலப்பாளையம், மௌலவி ஹாமித் பக்ரி ஆலிம் மன்பஈ, கத்தீப் அல்ஜாமிவுல் அஸ்ஹர் ஜும்மா மஸ்ஜித் / முதல்வர் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி - காயல்பட்டணம், மௌலவி ஷம்சுல்லுஹா ரஹ்மானி, முதல்வர் அல் இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்லூரி - மேலப்பாளையம், ஹாபிழ் S.K. ஸாலிஹ், மாணவர் இஸ்லாமிய கல்லூரி - கடையநல்லூர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். திருக்குர்ஆன் மனனப்பிரிவில் நமதூரைச் சேர்ந்த 20 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மௌலவி ஹாமித் பக்ரி ஆலிம் மன்பஈ இன்றைய பாடங்களை துவக்கி வைத்தார்கள்.
நிகழ்ச்சி அமைப்பு: A.A. நெய்னா முஹம்மத், இமாம் அல்ஜாமிவுல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித்.
இப்பயிற்சியில் சிறப்பம்சம் என்னவென்றால் ஓதும் காலத்தில் விடுபடும் பள்ளிக்கூடப் பாடங்கள் ஹிப்ளு வகுப்பிலேயே பயிற்றுவிக்கப்படுகிறது. எனவே மாணவர்கள் பள்ளிக்கூட பாடங்களையும் வருட இழப்பு இல்லாமல் தொடர இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
|