எழுத்து மேடை மையம், தமிழ் நாடு சார்பில் காயல்பட்டினத்தில் தொடர்ந்து பல்வேறு தலைப்பிலான ஆவணப்பட திரையிடல்களும், அதனை
தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.
கடந்த மே 1, ஞாயிறன்று மாலை 5 மணிக்கு காயல்பட்டினம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஹனியா சிற்றரங்கில் எழுத்து மேடை மையம், தமிழ்
நாடு சார்பில் எட்டாவது ஆவணப்பட திரையிடல் நிகழ்வு நடைபெற்றது.
அதில் - தமிழ் நாடு மின்சார பொறியாளர்கள் அமைப்பினால் தயாரிக்கப்பட்டு, சா.காந்தி மற்றும் ஆர்.ஆர்.சீனிவாசன் ஆகியோரின் இயக்கத்தில்
வெளி வந்துள்ள “ஊழல் மின்சாரம்” ஆவணப்படம் திரையிடப்பட்டது.
சுமார் 45 நிமிடம் நீளம் கொண்ட இந்த ஆவணப்படத்தின் திரையிடலில் - நகரின் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துக்கொண்டனர். திரையிடலின்
நிறைவில் கருத்து பரிமாற்றம் நடைபெற்றது.
சென்னையில் இந்த படத்தை வெளியிட்டு திரையிட இயலாதவாறு முதலில் தேர்தல் ஆணையமும், பின்னர் சென்னை மாநகர காவல்துறையும் பல
முறை தடை செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆவணப்படம் YOU TUBE
இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான சுருக்க முகவரி: https://goo.gl/y6gGbE
ஆவணப்படம் தெரிவிக்கும் தகவல்களின் சாராம்சம்
*** “ஊழல் மின்சாரம்” ஆவணப்படமானது அன்றாட நிகழ்வாகி விட்ட மின் வெட்டிற்குப் பின்னால் உள்ள கொள்ளை அரசியலைப்
பேசுகின்றது
*** நாட்டின் அனைத்துப் பொதுத்துறை விநியோக நிறுவனங்களையும் மீளாக் கடனில் மூழ்கடித்துள்ளனர் மின் உற்பத்தியில் நுழைந்த தனியார்
துறையினர்
*** தமிழகத்தில் மட்டும் இந்தக்கடன் 96 ஆயிரம் கோடி ரூபாய்
*** கொள்ளை ஆதாய தனியாருடன் கூட்டுச் சேர்ந்த அரசியலாரும், நிர்வாகிகளும் நடத்திய மின்சார ஊழல் எப்படி ஏழை மக்களின் கழுத்தை
நெரிக்கக் காத்திருக்கின்றது
*** அனைத்து பெருங்கட்சிகளுக்கும் இதில் பங்காளிகளே. இதில் முதல் பங்காளி காங்கிரஸ், அடுத்து பா.ஜ.க, அடுத்து தி.மு.க இப்பொழுது
அ.தி.மு.க. என குற்றவாளிகளை நாம் வரிசைப்படுத்த முடியும்
*** மிகச்சாதாரணமாகவும், இயல்பாகவும் சித்தரிக்கப்படும் மின்வெட்டை பொதுமக்களாகிய நாமும் அப்படியே ஏற்றுக்கொண்டு மின்சாரப்
பற்றாக்குறையினால் மட்டும்தான் மின் வெட்டு ஏற்படுகின்றது என நம்பி விடுகின்றோம்.
இந்த ஆவணப்படத்தை காண கீழே உள்ள படத்தினை சொடுக்கவும்:
புகைப்படங்களில் உதவி:
'தமிழன்' முத்து இஸ்மாயில்
ஷமீமுல் இஸ்லாம் |