தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் மே 16 அன்று நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் உள்ளடக்கிய திருச்செந்தூர் தொகுதியில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
காயல்பட்டணம்.காம் இணையதளம், 13 வேட்பாளர்களையும் தொடர்பு கொண்டு, அவர்களிடம் பொதுவான 6 கேள்விகளை முன் வைத்து,
அவற்றுக்கான பதிலினை அவர்களிடம் கோரியது.
அ.தி.மு.க. வேட்பாளர் சரத்குமாரிடம் - காயல்பட்டணம்.காம் இணையதளம், கேட்ட கேள்விகளும்,
அதற்கு அவர் வழங்கிய பதில்களும் - கீழே, முழுமையாக வழங்கப்படுகின்றன:
(1) பொது வாழ்வில், இதுவரை தாங்கள் ஆற்றியுள்ள பணிகளின் விபரங்கள்:
(2) திருசெந்தூர் தொகுதியின் முக்கிய பிரச்சனைகளாக எவற்றை கருதுகிறீர்கள்? அவற்றுக்கான தீர்வுகளை எவ்வாறு வழங்குவீர்கள்?
<><><> அடிப்படை வசதிகள்; தடையில்லா குடிநீர் வழங்குதல்; மேம்படுத்தப்பட்ட சாலைகள்; குளங்கள் தூர்வாருதல்; சுகாதார நிலையங்கள்;
தேவையான இடங்களுக்கு பஸ் வசதிகள்
<><><> தொகுதி மேம்பாட்டிற்கு - விவசாயிகள், மீனவர்கள் பிரச்சனைகள் தீர்வு, அரசு கல்வி நிறுவனங்கள், புது தொழில்கள் ஊக்குவிப்பு, வேலை
வாய்ப்புகள், அனல் மின் நிலையம் சிக்கல் தீர்க்க நடவடிக்கை
(3) நீங்கள் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானால், தொகுதி மக்களின் தேவைகளை அறிந்து, அவற்றை பூர்த்தி செய்யவும். சட்டமன்றத்தில் குரல்
கொடுக்கவும் என்னென்ன சிறப்பு முயற்சிகள் எடுப்பீர்கள்?
கடந்த 5 வருடங்களில் அதிகபட்சமாக 8,639 கேள்விகள் தொகுதி மேம்பாட்டிற்காகவும், தமிழகத்தின் முன்னேற்றதிற்காகவும் சட்டமன்றத்தில் கேட்ட
ஒரே சட்டமன்ற உறுப்பினர் நான் என்ற செய்தியை பத்திரிக்கைகளில் நீங்கள் படித்து இருக்கலாம்.
சட்டமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகள், இயற்றப்படும் சட்டங்கள் அனைத்தும் மாநிலத்தை முன்னுதாரணமாக உருவாக்கும் என்ற சிந்தனை, என்னை
ஒரு பொறுப்புள்ள சட்டமன்ற உறுப்பினராக செயலாற்ற வைத்திருக்கிறது. நான் என் கடமையை எந்த ஒரு நிலையிலும் தவறமாட்டேன் என்பதை
இங்கு பதிவு செய்கிறேன்.
தொகுதியின் கோரிக்கைகள் அனைத்தையும் ஒரு திறமையான குழு கொண்டு பரிசீலித்து, அவற்றில் தகுதி பெற்ற முக்கியம் வாய்ந்தவற்றிற்கு
உடனடி நடவடிக்கை எடுப்பேன். இந்த குழு என்னுடைய நேரிடையான பார்வையில் இயங்கும்
(4) தொகுதிக்கான உறுப்பினர் நிதி (ஆண்டொன்றுக்கு) 2 கோடி ரூபாயை மக்கள் பயன்பெறும் வகையில் எவ்வாறு தேர்வு செய்வீர்கள்?
தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை முதலில் தேர்ந்தெடுப்பேன். அவற்றுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் செயல்படுவேன்
(5) தொகுதி நிதியின் மூலம் செய்யவேண்டிய பணிகளுக்கு விடப்படும் டெண்டரை e-tender மூலம் கையாள்வீர்களா?
என் அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும் இயன்ற அளவிற்கு வெளிபடைதன்மையுடன் இருப்பதற்கு
தேவையான அனைத்தையும் செய்வேன்
(6) காயல்பட்டினம் பகுதியில் இயங்கும் DCW தொழிற்சாலை குறித்த தங்கள் நிலைப்பாடு என்ன? சுற்று சூழலுக்கும் மக்கள் உடல்நலனுக்கும் கேடு
விளைவித்துள்ள அந்த தொழிற்சாலைக்கு எதிராக குரல் கொடுப்பீர்களா? போராடுவீர்களா?
இது போன்ற கோரிக்கைகளை நிபுணர் குழு வைத்து அலசி ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி பொது மக்கள் பாதிக்காத
வகையில் முடிவு எடுத்து செயல்படுவேன். மக்களை பாதிக்கும் எந்த ஒரு செயலுக்கும் நான் மக்கள் பக்கம் நின்று போராடுவேன் என்று உறுதிபட
கூறுகிறேன்,
|