காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில், நேற்று (09.05.2016.) 04.10 மணி துவங்கி சுமார் 20 நிமிடங்கள் இதமழை பெய்தது. அதுபோல, இன்று 18.00 மணிக்குத் துவங்கி சுமார் 10 நிமிடங்கள் இடி முழக்கத்துடன் சிறுமழை பெய்தது.
இதன் காரணமாக, நகர வானிலையில் வெப்பம் குறைந்து இதம் நிலவுகிறது. 19.30 மணி நிலவரப்படி, இடி முழக்கம் சிறிய அளவில் தொடர்கிறது.
1. Re:...இறைவனிடம் கையேந்துங்கள் posted bymackie noohuthambi (kayalpatnam )[10 May 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43716
இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை. பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை.
நமது நாட்டு ரிசர்வ் வங்கி கவர்னர் பெரிய பொருளாதார நிபுணர் கூறுகிறார் இந்த ஆண்டு மழை பெய்வதை பொறுத்துதான் நாட்டின் பொருளாதாரம் எப்படி ஏற்றம் பெரும் என்பதை சொல்ல முடியுமாம். கட்டுக் கட்டாக நோட்டை வைத்திருக்கும் கவர்னர் இறைவனின் அருள் மழைக்காக ஏங்கி நிற்கிறார். இலவசமாக இறைவனிடமிருந்து அது நமக்கு வருகிறது.
இறைவனை நம்புவோருக்கும் அவன் தருகிறான் இறைவனே இல்லை என்போருக்கும் அவன் தருகிறான். தனியாக பிரார்த்தித்தாலும் தருகிறான். கூட்டாக பல்லாயிரக் கணக்கானோர் கூடி இருந்து ஆமீன் என்று சொன்னாலும் தருகிறான். அதைத்தான் இப்போது கண்கூடாக காண்கிறோம்.அல்ஹம்து லில்லாஹ்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross