சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்வுகள், பல்சுவைப் போட்டிகள், விருந்துபசரிப்புடன் நடைபெற்று முடிந்துள்ளது. இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
அல்லாஹ்வின் அளப்பெரும் அருளாலும் நமது மன்ற நிர்வாகிகளின் ஒருங்கிணைப்பாளும், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் தொய்வில்லா பணியாலும் தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 75 – வது மாபெரும் வெற்றி பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்வு 22/04/2016 வெள்ளிக்கிழமை அன்று இனிதே நிறைவேறியது அல்ஹம்துலில்லாஹ். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக SKS பங்குதாரர் ஜனாப்.சர்புதீன் அவர்களும் , ஜனாப்.அதிரை அஹ்மது அவர்களும், நம் மன்றத்து முன்னால் துணைத்தலைவர் ஜனாப்.மெஹர் அலி அவர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்.
நிகழ்ச்சியின் துவக்கம் காலை 10மணி என்ற போதிலும் 7 மணிக்கே நிர்வாகிகளும் 8 மணிக்கு உறுப்பினர்களும் வரத்தொடங்கினர். ஜுபைல், ரஹிமா போன்ற பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் காலையில் வந்தது பாராட்டிற்குரியது , வந்தவர்களை பதிவுச்செய்து அவர்களுக்கு லக்கி ட்ராவ்க்கான கூப்பனும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து விளையாட்டு போட்டியில் பங்கு பெற விருப்பமுள்ளவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டது.
காலையில் நீச்சல்குளத்தில் உல்லாச குளியல் முடிந்ததும் பசியை போக்க இட்லி. மெதுவடை , தேநீர் பரிமாறப்பட்டது.
சரியாக பத்து மணிக்கு ஆண்கள், குழந்தைகளுக்கு மைதானத்தில் வைத்து விளையாட்டுகள் துவங்கின. உள் அரங்கத்தில் வைத்து பெண்களால் பெண்களை கொண்டு பல போட்டிகள் நடத்தப்பட்டன.
ஆண்களுக்கானா கால் பந்து (TIE BREAK) விளையாட்டு காலை 10 மணிக்கு தொடங்கியது. 8 அணிகள் பங்கு பெற்ற போட்டியில் ஜனாப். சதக் அவர்களுடைய அணி முதல் பரிசை தட்டி சென்றது. அணியின் பங்காளர்கள் சதக்,அமீன், சாஹிப் நவாஸ், நூர்தீன், ஹபீப் மற்றும் இரண்டாவது பரிசை ஜனாப்.சித்தீக் அவர்களீண் தலைமையின் குழுவினர் மஃதூம், மஸ்தான், நிசார், காசிம் அவர்கள் இரண்டாவது பரிசை பெற்றனர்.
இரண்டாவது நடத்தப்பட்ட பெரியவர்களுக்கான சாக்குப் ஒட்ட போட்டியில் சுமார் 25 நபர்கள் பங்கு பெற்றார்கள். இதில் மன்ற தலைவர் ஜனாப்.ரபீக் அவர்களுடைய மகனார் இளவல்.செய்யது அஹ்மது அவர்கள் முதல் பரிசும் , இரண்டாவது பரிசை ஜனாப். அபூபக்கர் அவர்களும் தட்டிச் சென்றனர். அதனை தொடர்ந்து நடைப்பெற்ற கயிறிழுக்கும் போட்டியில் 14 நபர்கள் கொண்ட ஜனாப்.சதக்கு அவர்களுடைய அணி தங்களது பலத்தை நிரூபித்து பரிசை தட்டிச் சென்றது .
நடுத்தர வயது வாலிபர்கள் கால்பந்து, சாக்குப்போட்டி, கயிறிழுக்கும் போட்டி என்று பங்கு பெற்றாலும் இந்த போட்டிகளில் சீறி பாயும் சிறுத்தைகள் போல், தாவி ஓடும் கங்காருவை போல் பல வாலிப வயதினர்களும் பங்கு பெற்றார்கள். அதனால் பொதுச்செயலாளர் ஜனாப்.இஸ்மாயில் அவர்கள் 45 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு Passing the Ball விளையாட்டை ஏற்பாடு செய்தார். இந்நாள் தலைவர் ஜனாப்.ரபீக் , முன்னாள் துணைத்தலைவர் ஜனா.மெஹர்அலி ஆகியோர்கள் உட்பட பலரும் பங்கு பெற்றார்கள்.இப்போட்டியில் முதல் இடத்தை ஜனாப்.மெஹர் அலி அவர்களும் இரண்டாம் இடத்தை ஜனாப்.ஷாஜாஹான் அவர்களும் தட்டிச்சென்றார்கள்
அதனை தொடர்ந்து குழந்தைகளுக்கான லெமன் வித் ஸ்பூன் , பலூன் உடைத்தல் போட்டி , சாக்கு ஓட்டப் போட்டி வயது அடிப்ப்டையில் சிறப்பாக நடத்தப்பட்டது .
அதே போல் பெண்களுக்கான பெண்களை வைத்து நடத்தப்பட்ட நடைப்போட்டி , ஓட்டப்பந்தயம் , லெமன் வித் ஸ்பூன் , பாசிங் தெ பால் , பந்தை தாளத்தில் ஊதி தள்ளுதல் ஆகிய போட்டிகளில் அனைத்து பெண்களும் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
ஜும்மாவிற்கான நேரம் நெருங்கவே மௌலவி காயல்: நூஹு மஹ்ழரி அவர்கள் மதியம் பனிரண்டு மணிக்கு ஜூம்மா பயான் செய்து தொழுகை நடத்தினார்கள்.
மதியம் உணவு வேளை நெருங்கவே , ஜனாப்.இம்தியாஸ் & ஜனாப்.ஜியாவுதீன் அவர்களது தலைமையில் அமைந்த அணி அனைவருக்கும் சுவை மிகு நெய் சோறு , காயல் களரி கறி , தாலிச்சா , வாழைப்பழம் ஆகியவைகள் பரிமாறப்பட்டது, சிறிது நேரத்தில் ஆங்காங்கே குழந்தைகளின் சந்தோஷ குரல்கள். தாகம் தீர்க்க ஜனாப்.நூர்தீன் அவர்கள் வழங்கிய ஐஸ் கிரீம் பல வண்ணத்தில் எல்லோரின் கைகளில் தவழ்ந்து கொண்டிருந்தது.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு , உள்ளரங்கில் வைத்து குழந்தைகளுக்கான இனிய குர்ஆன், துஆக்கள் ஓதும் போட்டி வயது அடிப்படையில் நடைபெற்றது. அனைத்து குழந்தைகளும் தங்களுடைய மழலை குரலில் அனைவரிம் உள்ளங்களை கொள்ளை கொண்டனர் . அதனை தொடர்ந்து LKG & UKG பிள்ளைகளுக்கு வண்ணம் தீட்டும் போட்டி நடத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து ஆண்களுக்கு காயல் சொற்கள் , படிவம் நிரப்புதல் , நினைவுத்திறன் போட்டி (ஆண்கள் & குழந்தைகள்) மற்றும் பெண்களுக்கு மௌனமொழி , பாசிங் தி மெச்சேஜ் , படிவம் பூர்த்தி , காயல் வாத்தைகள் , குழு வினாடி வினா ஆகிய போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது இதில் அனைவரும் மிகவும் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அஸர் தொழுகை மற்றும் தேநீர் இடைவெளைக்கு பிறகு நடைப்பெற்ற தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 75 வது பொத்துக்குழுவில் , சிறப்பு விருந்தினர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்புரையை தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் அறிமுகம் நடைபெற்றது,
அதனை தொடர்ந்து இம்மன்றம் இதுவரை செய்த பல நலப்பணிகள் , செயல்பாடுகள் , எதிர்கால செயல் திட்டங்கள் , நிதி நிலை ஆகியவைகள் குறித்து அனைவருக்கும் விளக்கப்பட்டது , இடையில் அனைவருக்கும் காயல் கறிக்கஞ்சி மற்றும் ஸ்ப்ரிங் ரோல் பரிமாறப்பட்டது.
அதனை தொடர்ந்து நடைப்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் , பல்வேறு போட்டிகளில் பங்குப் பெற்று வெற்றிப் பெற்றவர்களுக்கு சுமார் 150 க்கும் மேற்ப்பட்ட அழகிய பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது . மேலும் வருகையை பதிவு செய்தவர்களிலிருந்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது .
இறுதியாக தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 75 வது பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்வு வல்ல நாயகனின் துணையோடு சீரும் சிறப்போடு நடைபெற உடலாலும் , பொருளாலும் உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி பாரட்டி 'துஆ' கஃப்பாராவுடன் இனிய இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
புகைபடங்கள் கீழே உள்ள லிங்கில் இணைக்கப்பட்டுள்ளது:-
https://drive.google.com/folderview?id=0BzTxCdKSUEeSbjRVZ2dCNzJGb3c&usp=sharing
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
முத்துவாப்பா (புஹாரி)
செயற்குழு உறுப்பினர்
தம்மாம் காயல் நல மன்றம்
தம்மாம் காயல் நல மன்றத்தின் முந்தைய (74ஆவது) பொதுக்குழு குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தம்மாம் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |