மே 16 அன்று தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இத்தேர்தலில் மக்களின் வாக்கு யாருக்கு என கண்டறிய, மக்கள் கருத்துக் கேட்பு என்ற புதிய - சிறப்பு பக்கத்தினை, காயல்பட்டணம்.காம் உருவாக்கியது.
அதில் கீழ்க்காணும் கேள்வி மக்கள் முன் வைக்கப்பட்டு, கருத்து கோரப்பட்டது.
கேள்வி:
2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள்?
பதில்கள் (ஏதாவது ஒன்று):
--- அ.தி.மு.க. கூட்டணிக்கு
--- தி.மு.க. கூட்டணிக்கு
--- மநகூ/தேமுதிக/தமாகா
--- பிறர்/நோட்டா
7 நாட்கள் நடந்த இந்த கருத்து கேட்பு முயற்சி இன்று நிறைவுபெற்றது.
அதன்படி, தங்களின் வாக்கு -
--- தி.மு.க. கூட்டணிக்கு என 69 சதவீதத்தினரும்,
--- மநகூ/தேமுதிக/தமாகா. கூட்டணிக்கு என 18 சதவீதத்தினரும்,
--- பிறருக்கு /நோட்டா என 7 சதவீதத்தினரும்,
--- அ.தி.மு.க. கூட்டணிக்கு என 6 சதவீதத்தினரும்,
தெரிவித்தனர்.
இந்த கருத்துக் கேட்பு அறிவியல் பூர்வமானது அல்ல.
இது - காயல்பட்டணம்.காம் இணையதள வாசகர்களில், மக்கள் கருத்துக் கேட்பு முயற்சியில் பங்கேற்க விரும்பி, ட்விட்டர் சமூக ஊடகம் வாயிலாக தங்கள் விருப்பத்தை பதிவு செய்த 68 நபர்களின் கருத்தின் அடிப்படையிலானது.
|