தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் மே 16 அன்று நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் உள்ளடக்கிய திருச்செந்தூர் தொகுதியில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
காயல்பட்டணம்.காம் இணையதளம், 13 வேட்பாளர்களையும் தொடர்பு கொண்டு, அவர்களிடம் பொதுவான 6 கேள்விகளை முன் வைத்து,
அவற்றுக்கான பதிலினை அவர்களிடம் கோரியது.
பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) வேட்பாளர் குமாரகுருபர ஆதித்தனிடம் - காயல்பட்டணம்.காம் இணையதளம், கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் வழங்கிய பதில்களும் - கீழே முழுமையாக வழங்கப்படுகின்றன:
(1) பொது வாழ்வில், இதுவரை தாங்கள் ஆற்றியுள்ள பணிகளின் விபரங்கள்:
தேசீகா அறக்கட்டளையின் சார்பாக குழந்தைகளுக்கு இலவச கல்வி, ஸ்ரீவைகுண்டம் மணல் திருட்டிற்கு எதிர்பாக மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு 100 நபர்கள் மேலாக முற்றுகை போராட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் - ஸ்ரீவைகுண்டம் ஆற்று அணைப்பகுதியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு தடை கோரி வழக்கு பதிவு செய்வதற்கு முதற்கட்ட முயற்சி எடுக்கப்பட்ட வருகிறது
(2) திருசெந்தூர் தொகுதியின் முக்கிய பிரச்சனைகளாக எவற்றை கருதுகிறீர்கள்? அவற்றுக்கான தீர்வுகளை எவ்வாறு வழங்குவீர்கள்?
காயல்பட்டினத்திற்கு இரண்டாவது குடிநீர் இணைப்பு திட்டத்தை வழங்கியும், விரைவில் செயல்படுத்த, மேலும் நம் தொகுதிக்கு உட்பட்ட பாசன குளங்கள் தூர் வாரப்படும்
(3) நீங்கள் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானால், தொகுதி மக்களின் தேவைகளை அறிந்து, அவற்றை பூர்த்தி செய்யவும். சட்டமன்றத்தில் குரல்
கொடுக்கவும் என்னென்ன சிறப்பு முயற்சிகள் எடுப்பீர்கள்?
தொகுதி மக்களின் தேவைகளை தெரிந்து கொள்வதற்கு மாதம் இரு முறை கலந்துரையாடல் செய்யப்பட்டு - சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன்
(4) தொகுதிக்கான உறுப்பினர் நிதி (ஆண்டொன்றுக்கு) 2 கோடி ரூபாயை மக்கள் பயன்பெறும் வகையில் எவ்வாறு தேர்வு செய்வீர்கள்?
தொகுதி மக்களின் தேவைகளை தெரிந்து கொள்வதற்கு மாதம் இரு முறை கலந்துரையாடல் செய்யப்பட்டு - சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன்
(5) தொகுதி நிதியின் மூலம் செய்யவேண்டிய பணிகளுக்கு விடப்படும் டெண்டரை e-tender மூலம் கையாள்வீர்களா?
தொகுதி நிதியை, தொகுதி மக்களின் தேவைகளை அறிந்து, மக்களோடு இணைந்து அப்பகுதி, மக்களால் கமிட்டி ஏற்படுத்தி வேலைகள் கண்காணிக்கப்படும்
(6) காயல்பட்டினம் பகுதியில் இயங்கும் DCW தொழிற்சாலை குறித்த தங்கள் நிலைப்பாடு என்ன? சுற்று சூழலுக்கும் மக்கள் உடல்நலனுக்கும் கேடு
விளைவித்துள்ள அந்த தொழிற்சாலைக்கு எதிராக குரல் கொடுப்பீர்களா? போராடுவீர்களா?
காயல்பட்டணம் மக்களோடு சேர்ந்து போராடுவேன்
|