சூரியனை சுற்றி வரும் 8 பெரிய கிரகங்களில், (PLANETS) புதன் (MERCURY) - முதல் கிரகமாகும். புதன் (MERCURY) கிரகமும், சுக்ரன்
(VENUS) கிரகமமும் (இரண்டாவது கிரகம்) - பூமிக்கும், சூரியனுக்கும், நடுவில் உள்ளன.
புதன் (MERCURY) கிரகம் - சூரியினை, 80 நாட்களுக்கு ஒரு முறை சுற்றுகிறது. அது போல, சுக்ரன் (VENUS) கிரகம் - சூரியினை, 225 நாட்களுக்கு
ஒரு முறை சுற்றுகிறது. இந்த அடிப்படையில் பார்க்கும் போது, புதன் (MERCURY) கிரகம், சுமார் 80 நாட்களுக்கு ஒரு முறை - பூமியில் இருந்து
பார்க்கும் போது, சூரியன்-புதன்-பூமி என்ற நேர் கோட்டில் வருகிறது. அது போல, சுக்ரன் (VENUS) கிரகம், சுமார் 225 நாட்களுக்கு ஒரு முறை -
பூமியில் இருந்து பார்க்கும் போது, சூரியன்-சுக்ரன்-பூமி என்ற நேர் கோட்டில் வருகிறது.
அந்த வேளைகளில் எல்லாம், பூமியில் இருந்து பார்க்கும் போது, சூரியனுக்கு மேலேயோ, கீழேயோ - அந்த கிரகங்கள் சென்று விடும்.
சில அரிதான தருணங்களில், புதன் (MERCURY) மற்றும் சுக்ரன் (VENUS) கிரகங்கள் - பூமியில் இருந்து பார்க்கும் போது, சூரியன் வட்டத்தை
(SUN'S DISK) தாண்டி செல்லும் காட்சி காணக் கிடைக்கும். அதனை - வானியல் நிபுணர்கள் - TRANSIT - என அழைப்பார்கள்.
அது போன்ற, ஓர் அரிய நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது.
சூரியினில் இருந்து முதல் கிரகமான புதன் (MERCURY), சூரியன் வட்டத்தை கடக்கும் காட்சியை (TRANSIT OF MERCURY) நாளை (மே 9)
காணலாம்.
இந்த நிகழ்வு, இங்கிலாந்து (UTC) நேரப்படி - 11:12 மணிக்கு துவங்கி (இந்திய நேரம்: மாலை 4:42), 18:42 மணி வரை (இந்திய நேரம்: நள்ளிரவு 00:12) நீடிக்கும். இந்த நேரங்களில், உலகில் எங்கெல்லாம் சூரியன் தென்படுமோ அங்கெல்லாம், புதன் (MERCURY) கிரகம் - சூரிய வட்டத்தை கடக்கும் காட்சியை காணலாம்.
இந்த காட்சியை, வெறுங்கண்ணால் பார்க்க கூடாது. சிறப்பு கண்ணாடிகள் (SOLAR FILTER GLASSES) மூலமோ, பாதுகாப்பு வசதிகள்
செய்யப்பட்ட தொலை நோக்கிகள் மூலமோ, அல்லது முகம் பார்க்கும் கண்ணாடியை சூரியனை நோக்கி காண்பித்து, அதன் பிம்பத்தை மதில் அல்லது
திரையில் பட செய்து, காணலாம்.
இதற்கு முன்னர், 8-11-2006 அன்று - புதன் (MERCURY) கிரகம், சூரியனை கடக்கும் காட்சி - பூமியில் இருந்து காண கிடைத்தது, இதற்கு பிறகு, - 11-11
-2019 அன்று இந்த காட்சியை (TRANSIT OF MERCURY) காணலாம். |