உலக முதலீட்டளர்கள் மாநாடு... பகல் கொள்ளை... posted byhasbullah mackie (dubai)[04 May 2016] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43673
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான மின்வெட்டு அமலுக்கு வந்தது தொழிற்சாலைகள் மூடியது யாராலும் மறந்து இருக்க முடியாது...
முதல் முறையாக பவர் இல்லாமலே யூனிட் விலையை உயர்த்தியது... பால் விலையை கடுமையாக உயர்த்தியது.. பேருந்து கட்டண உயர்வு... வந்தவுடனே திமுக வை பலி வாங்கும் எண்ணத்திலே மக்கள் பணத்திலே கட்டிய கட்டிடங்களை எல்லாம் மானத்திற்காக வேண்டி சீரழித்து.. சமசீர் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்தது..
இப்போது சொல்லி வரக்கூடிய படி படியாக மது விலக்கு என்பதை ஆட்சிக்கு வந்த பிறகு அமுல் படுத்தியிருக்கலாமே?? அப்படி செய்திருந்தால் மதுவை ஒழித்திருக்கலாமே.. ?? ஏன் அதை செய்யவில்லை? எவ்வளவு போராட்டகள் நடந்தும் கண்டு கொள்ளாமல் விட்டது...
மக்களுக்காக நான், உங்களுக்காகவே நான்.. ஒரு தாய்க்கு தான் மகனின் அருமை தெரியும்.. அது உண்மையாக இருந்தால் எப்படி இதை ஒளிக்காமல் இருந்திருப்பார்.. ஒட்டு வங்கிக்காக வேஷம் போடுவது தெளிவாகின்றது. மழை வெள்ளத்தில் கிடைத்த கோடி கணக்கான மக்கள் பணம் எங்கே போனது ?? உலக முதலீட்டார்கள் என்று நடத்தி பல கோடி திட்டங்கள் தமிழ் நாட்டில் வரப்போகிறது என்று படம் காட்டினார்களே.. ? அது என்ன ஆனது ? அந்த கோடிக்கணக்கான செலவினால் என்ன பயன்../??
தனது ஆடம்பர வாழ்க்கைக்காக மக்கள் பணத்தில் ஹெலிபேட் உண்டாக்குவது.. கோடை நாட்டு எஸ்டேட் போயி ரெஸ்ட் எடுப்பது.. மழையினால் பாதிக்கப்பட்டவர்களை காரில் இருந்து இறங்கி சந்திக்க முடியவில்லை.. அனால் சோ என்பவருக்கு சுகமில்லை என்றவுடன் இறங்கி போக முடிகிறது.. இப்போது தேர்தல் என்று வரும் பொது இறங்கி பல இடங்களுக்கும் செல்லுவது.. இப்போது மட்டும் எப்படி முடிகிறது??
இப்படியெல்லாம் குணா சித்திரம் கொண்டுள்ள.. அம்மையாரின் ஆட்சி இனியும் தொடர்ந்தால் கலி காலம் தான்.. ஸ்டிக்கர் கலாச்சாரம் தான் இனி நடக்கும்.. அராஜகம் அரங்கேறும்.. திமுக கட்சியும் இதற்கு விதி விலக்கல்ல.. சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக இருந்தது திமுக ஆட்சியில் தான்.. முஸ்லிம்களை பர பட்சமாக குண்டர் சட்டத்தில் போட்டது.. குடும்ப ஆட்சி நடக்கும்.. கோடி கணக்கான மக்கள் பணம் குடும்பத்திற்கு செல்லும்.. ஆக மொத்தம் இரு திராவிட கட்சிகளும் மக்களை மடையர்களாக ஆகினார்கள் கடந்த காலங்களில்.. இதை தவிர்த்து மக்கள் நல கூட்டணி ஓரளவு பரவாக இல்லை என்றே சொல்லலாம்.. மக்களால் அடையாளம் காணப்பட்ட இவர்களை விட நல்லவர்கள் அந்த கூட்டணியில் இருக்கிறார்கள். ஆனால் விஜயகாந்த் தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்ததால் அவர்கள் வெற்றி வாய்ப்பு குறைவு தான்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross