Re:...தொழுகை தொழுகை தொழுகை posted bymackie noohuthambi (kayalpatnam )[06 May 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43682
ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் மஹ்லரி அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக. புனித மிராஜ் தினத்தில் அவர்கள் ஆற்றிய உரை மிகவும் சிறப்பாக இருந்தது.
முதலாவது, அவருக்கு கொடுக்கப்பட்ட தலைப்புக்குள் நின்று பேசினார். அன்று ஓதப்பட்ட மாநபி மொழிகளிலிருந்து மேற்கோள் காட்டி பேசினார். பொதுவாகவே பேச்சாளர்கள் புகாரி ஷரீபில் பேசுபவர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது உலகின் பலநாடுகளிலிருந்தும் அவர்கள் பேச்சை பல்லாயிரக் கணக்கான பேர்கள் இணையத்தளம் மூலம் கேட்கிறார்கள்.
89 ஆண்டுகளை கடந்து நிற்கும் ஒரு பாரம்பரியம் மிக்க மஜ்லிஸில் 45 நிமிடங்கள் பேசக் கிடைப்பதே ஒரு பாக்கியம். ஆனால் சிலர் பேசும்போது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் பேசுவது, அன்று ஓதப் பட்ட நபி மொழிக்கும் இவர் பேச்சுக்கும் தொடர்பில்லாமல் அந்த நேரத்தை வீணடித்த நிகழ்ச்சிகளை எல்லாம் எனது சக நண்பர்கள் என்னிடம் கூறி வருத்தப் பட்டுக் கொண்டார்கள். அவர்கள் சொல்வதில் உண்மை நியாயம் இருக்கிறது என்பதை நானும் உணர்ந்தேன்.
உலமாக்களை தேர்வுசெய்யும் குழு ஒன்று முன்பு இந்த சபையில் இருந்தது. அவர்கள் மிக நேர்த்தியாக இந்த விஷயத்தை கையாண்டார்கள். காலப் போக்கில் முஹல்லாவில் எல்லா ஆலிம்களுக்கும் புதிய, இளைய தலைமுறைக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற அபிலாஷை ஏற்பட்டதில் தவறில்லை. ஆனால் அவர்கள் அன்று பேச வேண்டிய தலைப்பிலிருந்து அவர்கள் திசை திரும்பி பேசும்போது அவர்களை நல் வழிப்படுத்த வேண்டியது உலமாக்கள் சபைதான். அதுவும் இப்போது உலகம் முழுவதும் இந்த 30 நாள் நிகழ்ச்சிகளும் நேரலையில் ஒளி பரப்பப் படுகிறது.பேச்சாளரைக் குறை சொல்வதுடன் உலமாக்கள் சபையையும் குறை சொல்வார்கள் கவனித்துக் கொள்ளுங்கள்.
அடுத்து ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் அவர்கள் நபிகள் நாயகம் மிஉராஜுக்கு சென்று வந்த பிறகு மூமின்களுக்கு அதே மிராஜ் தொழுகை என்று சொன்னதை சபையில் பதிவு செய்தார்கள். நம்முடைய தொழுகை எப்படி இருக்கிறது என்பதையும் சொன்னார்கள். குறிப்பாக நமது பெண்கள் திருசெந்தூருக்கு துணிமணி எடுக்க சென்றாலும் நெல்லை தூதுக்குடி என்று சென்றாலும் அவர்கள் தொழுகை எல்லாம் ஒத்தி வைத்துவிட்டு இரவு வீட்டுக்கு வந்து மொத்தமாக தொழுகிற காட்சியை பார்க்கிறோம். ஆண்களும் அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள், பெருநாளைக்கு துணி மணி எடுக்க போகிறவர்கள் நோன்பு திறக்க அந்த கடைகளில் தரும் ஈத்தப் பழம் குளிர்பானத்தை வைத்து நோன்பு திறந்து விட்டு மீண்டும் துணிமணி வாங்கும் பணியை தொடர்கிறார்கள். மக்ரிப் தொழுகை களாவாகி விடுகிறது.
சில ஊர்களில் பேருந்து நிலையம் அருகே பள்ளிவாசல்கள் இருந்தும் பெண்கள் நினைத்தால் அங்கு சென்று தொழுக முடியாமல் தடுத்து நிறுத்தப் படுகிறார்கள்.அதன் காரணத்தாலும் அவர்கள் தொழுகை களாவாகி விடுகிறது. இலங்கை போன்ற பௌத்த நாடுகளிலும் கூட பெண்கள் தொழுவதற்கு விசேஷ ஏற்பாடுகள் இட வசதிகள் செய்யப் பட்டுள்ளது. நமது நாட்டிலும் அப்படி இருக்கிறது. ஆனால் நமதூர் போன்ற உலமாக்கள் நிறைந்த ஊரில் தொழுகை பற்றி அதிகமதிகமாக அதன் கட்டாயம் வலியுறுத்தப் படுகிற நமது ஊரில் பேருந்து நிலையம் அருகில் உள்ள செய்யத் ஹுசைன் பள்ளிவாசலில் கூட அந்த வசதி இல்லை. உலமாக்கள் இந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது ஹபீபுர் ரஹ்மான் அவர்களின் பிரசங்கத்திலிருந்து நாம் பெற வேண்டிய பாடம். பெண்கள் இதை ஒரு குறையாகவே என்னிடம் சொன்னார்கள்.
இந்த சிறப்பான மஜ்லிஸில் நாம் எதை எல்லாம் கேட்டோமோ அதன்படி செயல்பட அல்லாஹ் தவ்பீக் செய்வானாக. மீதியுள்ள நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளும் சிறப்பாக அமைந்து இறுதி நாள் து ஆ பிரார்த்தனைகளை எல்லாவற்றையும் அல்லாஹ் கபூல் செய்வானாக. இந்த புகாரி ஷரீபின் நாயகர் இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் து ஆ பரக்கதாலும் நபிகள் நாயகம் அவர்களின் நல்லாசியாலும் நமதூரும் நமது மக்களும் எல்லா வளமும் பெற்று அல்லாஹ்வின் திருமறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் வழிமுறை இவற்றை பின்பற்றி வாழும் நல் பாக்கியத்தையும் தந்தருள்வானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross