புள்ளிவிவரங்களிலிருந்து ஒரு பரவைக்கண் பார்வை.... posted byShameemul Islam SKS (Chennai)[10 May 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 4369
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்...........
+2 தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டது. அது பற்றிய சகோதரர் தம்மாம் செய்யத் ஹசனின் புள்ளிவிவரங்களிலிருந்து ஒரு பரவைக்கண் பார்வை.
1 ) முதலில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவியருக்கும் வாழ்த்துக்கள்.
2 ) தரச்சி விகிதம் 2010 -இலிருந்து சுமார் 4 % இவ்வாண்டு குறைந்து காணப்படுகிறது. எழுதியோர் எண்ணிக்கை சென்ற வருடத்தை விட இவ்வாண்டு அதிகம்.
3 ) எழுதுவோர் எண்ணிக்கைக்கு ஏற்பவே 700 மதிப்பெண்களுக்கு கீழ் எடுப்போர் எண்ணிக்கையும் கூடுதலாகவே உள்ளது. எதையும் திட்டமிடாமல் ஏனோ படித்து பாசானாலே போதும் என்ற மாணவர் மனப்பாங்கு மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
4 ) 901 -1000 மதிப்பெண்கள் பெற்றிருப்பவர்கள் எண்ணிக்கை சென்ற ஆண்டை விட இவ்வாண்டு சுமார் 5 % குறைந்திருக்கிறது.
5 ) 1001 -1100 மதிப்பெண்கள் பிரிவில் 2008 -இல் 14 .52 % ஆக இருந்தது இடைப்பட்ட ஆண்டுகளில் குறைந்து இவ்வாண்டு 13 .86 % வீதமாக முன்னேறி இருக்கிறது. இப்பட்டியலில் தான் திட்டமிட்டு படிப்போர் அதிகம் இடம் பெற்றிருப்பர். 1001 -க்கு மேல் மதிப்பெண் பெற்றிருப்போர் எண்ணிக்கையும் 2008 -இர்குப்பின் இவ்வாண்டே கூடுதலாக உள்ளது.
6 ) மருத்துவ படிப்பிற்கான 195 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருப்போர் எண்ணிக்கையும் 190 -193 .75 -இற்கு மேல் மதிப்பெண் பெற்றிருப்பவர் எண்ணிக்கையும் ௦.45 % வீதமாக முன்னேறி உள்ளது வரவேற்கத்தக்கது. இதை இன்னும் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பள்ளிக்கூடங்கள் இப்போதிலிருந்தே கவனிக்க வேண்டும்.
7 ) பொறியியல் துறைக்கான பிரிவில் 195 -க்கு மேல் எடுத்திருப்பவர்கள் எண்ணிக்கை 2008 -இல் 1 .10 % ஆக இருந்தது சரிந்து தற்போது ௦.68 % வீதமாக குறைந்துள்ளது. இதுவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
8 ) அதே துறைக்கு செல்வதற்கு 180 -க்கு மேல் எடுத்திருப்போர் எண்ணிக்கையும் 2008 -இலிருந்து குறைந்து கொண்டே போகிறது. .அதிகமாக பொறியியல் கல்லூரி செல்பவர்கள் இருந்தும் போதிய திட்டமிடுதல் இன்மையால் இந்நிலைக்கு வந்திருப்பதை அறிய முடிகிறது.
9 ) தேர்ச்சி விகிதத்தில் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவியரே மிகைத்து காணப்படுகின்றனர். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மீது இன்னும் அதிக கவனம் எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
10 ) 1001 -1100 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 2010 -இல் 4 .99 % வீதமாக இருந்தது இவ்வாண்டு 8 .89 % வீதமாக அதிகரித்துள்ளனர். இப்பிரிவினர் பாராட்டுக்குரியவர்கள். மாணவியர் எப்போதும் போல் இப்பிரிவில் கூடுதலாக பெற்று 16 .92 % வீதமாக உள்ளனர்.
11 ) காயல் பர்ச்ட் டிரஸ்ட் மற்றும் இக்ரா கல்விச்சங்கத்தின் சேவையை இத்தருணத்தில் பாராட்டியே ஆக வேண்டும். உங்கள் பனி மேன் மேலு சிறந்து விளங்கி இறை அருள் பெற்றிட இருகரமேந்தி பிரார்த்திக்கிறோம். நன்றி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross