செய்தி: ஊழல் மின்சாரம்: மின் விநியோகத்தில் பல ஆண்டுகளாக நடந்து வரும் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைக்கேடு குறித்த ஆவணப்படம் நகரில் திரையிடப்பட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இந்த ஆவண படத்தை பார்க்க முடியாமல் போய்விட்டதே posted bymackie noohuthambi (kayalpatnam )[07 May 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43691
மக்கள் விழிப்புணர்வு பெற இப்படியான முயற்சிகள் மேற்கொண்டுள்ள நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். உங்களை உற்சாகப் படுத்த பணம் காசு தர வேண்டியதில்லை உங்கள் உணர்வுகளை மதித்து இந்த ஆவண படம் திரையிடும்போது நமதூர் மக்கள் திரளாக வந்திருந்து உங்களுடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டாலே உங்களுக்கு இதுபோன்ற இன்னும் பல ஊழல்களை மக்கள் முன் எடுத்து வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எழுச்சியை ஏற்படுத்தும்.
ஒரு திருமண வீடு அங்கே வெகு விமரிசையாக நிலவொளி போல் மின்விளக்குகள் போடப்பட்டு ஒளி வெள்ளத்தில் அந்த இடமே மிதந்து நிற்கிறது. ஒலி ஒளி அமைப்பாளர்கள் இதற்காக அந்த திருமண வீட்டார்களிடம் வசூலிக்கும் பணம் மிக குறைவு. திருமணநாளுக்கு முன்னதாகவே இவர்கள் பேரம் பேசுகிறார்கள். 12 மணிநேரம் அல்லது 24 மணி நேரம் லைட்டுகள் எரிய தனியாக மோட்டார் ஜெனெரெடர் போடவேண்டுமானால் அதற்கு இவ்வளவு ரூபாய் தரவேண்டும். தெருவில் அரசு அமைத்துள்ள மின் கம்பியில் இருந்து லைன் இழுத்தால் அதற்கு ஆபீசில் உள்ளவர்களை கவனித்தால் போதும். உங்களுக்கு செலவு குறைய வரும். இப்படி பேரம் பேசுபவர்கள் யாரோ வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஏழை பாளைகள் அல்ல .வசதி படைத்தவர்கள். சட்டி சட்டியாக விருந்து அளிப்பவர்கள் வீடு நிறைய மின் அலங்காரங்கள், வீட்டு வெளியே சீரியல் லைட் போட்டு இரவை பகலாக ஆக்கி தங்கள் மேலாதிக்கத்தை ஊர் முழுக்க வெளிச்சம் போட்டு காட்டும் பணக்காரர்கள். அரசியல் தலைவர்கள் கூட்டங்கள் மேடைகள் எல்லாமே இந்த ஒளி வெள்ளத்தில் மிதப்பது இப்படித்தான். பின் ஏன் நஷ்டம் வராது.
IF YOU CANNOT SOLVE A PROBLEM THEN YOU ARE PART OF THAT PROBLEM
உங்களால் ஒரு பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால், நீங்கள் அந்த பிரச்சினை தீராமல் இருப்பதற்கு ஓர் காரணம் என்று சொல்வார்கள். உண்மையில் நாம் பொதுமக்களும் இதற்கு ஒரு காரணம். ஏற்கெனெவே எல்லா ஆட்சிகளுமே ஊழல் மயம் என்பதற்கு சகாயம் அறிக்கையே போதும்.இந்த ஆவண படத்தை திரையிட எப்படி அரசு காவல்துறை அனுமதித்தது என்பது ஆச்சரியமாக உள்ளது. ''மூடு, டாஸ்மாக்கை மூடு'' என்று பாட்டுப் பாடினாலே அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யும் ஒரு அவலநிலை இந்த தமிழகத்தில் இருக்கும்போது இப்படி ஒரு துணிச்சலான செயலை செய்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருப்பதை பாராட்டவே வேண்டும். இளைஞர்கள் நினைத்தால் எல்லா ஊழல்களையும் வெளிக் கொண்டு வர முடியும். அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் அதற்கான அங்கீகாரம் தான்.
கால்பந்தாட்டத்தில் 11 வீரார்கள் விளையாடும்போது 11000 பேர் கைதட்டி கரகோஷம் எழுப்பி அவர்களை உற்சாகப் படுத்துகிறோம்.அவர்கள் வெற்றி வாகை சூடவேண்டும் என்ற வேட்கையை வெறியை அந்த கரகோஷம் உண்டாக்குகிறது.
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் கொண்டு ஈமான் கொண்டுள்ள நாம் இந்த ஹராமான விஷயத்தை விட்டும் தவிர்ந்திருக்க வேண்டும். அரசுதான் நம்மிடம் எக்க சக்கமாக வரி வசூலிக்கிறதே, நமது பணம்தானே கொள்ளை போகிறது, அப்படி இருக்கும்போது இதை செய்வதால் என்ன வந்து விடப் போகிறது என்று நினைப்பது தவறு.
DO NEGATIVES DO NOT MAKE ONE POSITIVE இரண்டு தவறுகள் சேர்ந்தால் ஒரு சரியாகாது.
விழிப்புணர்வு பயணம் தொடரட்டும். மக்கள் விழித்து எழும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross