செய்தி: அ.தி.மு.க. வேட்பாளர் சரத்குமார், காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு சிறப்பு பேட்டி! சட்டசபையில் தொகுதி மேம்பாட்டிற்கு அதிக கேள்விகளை கேட்ட உறுப்பினர் தான் என பெருமிதம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...விடுபட்ட 6 கேள்விகள் - மக்கள் கேட்கிறார்கள் posted bymackie noohuthambi (kayalpatnam )[09 May 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43700
தென்காசி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி இவ்வளவு சேவைகள் செய்த நீங்கள் உங்களுக்கு வாய்ப்புக்களை நல்கிய முதல்வர் அம்மா அவர்களின் கட்சியை விட்டு நீங்கள் விலக காரணம் என்ன - மீண்டும் அவரிடம் அடைக்கலம் ஆன ரகசியம் என்ன?
உங்கள் சொந்த சின்னத்தை விட்டு இரட்டை இலை சின்னத்தில் போட்டி இட சம்மதித்த மர்மம் என்ன. இரண்டு இடங்களில் போட்டி இட்டு வென்ற உங்கள் கட்சி ஒரு இடம் போதும் என்று திருப்திப் பட்டுக் கொண்ட உங்கள் நிலைப்பாடு என்ன நீங்கள் சிறப்பாக செயல்பட்ட தென்காசியில் மீண்டும் போட்டி இடாமல் திருச்செந்தூரை தேர்ந்தெடுத்த உங்கள் முடிவு சரியானதா?
திருச்செந்தூர் தொகுதியில் நாடார் சாதி ஓட்டு உங்களுக்கு கிடைக்கும் என்று சாதி உணர்வில் உங்களை அம்மா நிறுத்தியிருப்பதாக மக்கள் நினைக்கிறார்களே, இந்த யூகம் சரியானதா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross