Re:..தொப்பி முஸ்லிம்களின் அடையாளம் . posted bymackie noohuthambi (kayalpatnam )[09 May 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43702
நம்மை சந்திக்க வரும் வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் முஸ்லிம்களாக இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு ஒரு தொப்பியை அணிவித்து அவர்கள் அடையாளங்களை மாற்றி நமது அடையாளத்தை கொச்சைப் படுத்தாதீர்கள். நம்மை சிறுமைபடுத்திக் கொள்ளும் செயலாகும் இது.
தயவு செய்து இன்னும் ஒரு வாரம் பொறுத்திருங்கள். இவர்கள் நமது தலையில் ''பெரிய தொப்பியை'' போடாமல் இருந்தால் சரிதான்...
மறைந்த எனது இனிய நண்பர் SK சொல்வார்.
எங்கிருந்தெல்லாமோ யார் பணத்தையோ கொள்ளை அடித்துக் கொண்டு ஊழல் செய்து ஏமாற்றிக் கொண்டு இங்கு வந்து வானளாவிய மாளிகை போன்று வீடுகளை கட்டுகிறார்கள். அந்த வீட்டின் முகப்பின் சலவைக் கல் ஒன்று பதித்திருக்கும். ''ஹாதா மின் பழலி ரப்பீ'''... என்று அதில் எழுதப் பட்டிருக்கும். அது ''ஹாதா மின் பழ லி ரப்பீ அல்ல'' ''ஹாதா மின் பழ லி தொப்பி'' என்று திருத்தி வாசித்துக் கொள்ளுங்கள் என்பார், நகை சுவை தென்றல் SK மச்சான் அவர்கள்.
சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் SK
அல்லாஹ் அவரது மண்ணறையை சொர்க்க பூங்காவாக்குவானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross