நன்றியுடைய முஸ்லிம்கள்!.. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[10 May 2016] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43715
முஸ்லிகளாகிய நாம் இந்திய திருநாட்டில் சுமார் 20% சதவீதம் வாழ்கிறோம், இந்த20%சதவீததிற்குறிய பிரதிநிதிகளை நம் நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ நாம் பெற்றுக்கிறோமா என்றால் இல்லை!
உதாரணத்திற்கு சட்டமன்றத்தைப்பொருத்தவரை 22லிருந்து 23 இடங்களிலாவது நம்முடைய பிரதிநிதிகள் இருக்க வேண்டும்.அதற்குறிய அந்தஸ்த்தை,மரியாதையை,உரிமையை எந்த பெரிய அரசியல் கட்சிகள் நமக்கு தந்திருக்கிறார்கள் என்பதை நாம் நினைத்துப்பார்க்க கடமைப்பட்டுள்ளோம்!
தற்போதுள்ள நிலையில் ஆண்டுகொண்டிடிருக்கும் கட்சியையோ,ஆழ முயலும் பெரிய கட்சியையோ எடுத்துக்கொண்டால் .தி.மு.க ஒன்றுதான் நம்முடைய சமுதாயத்திற்கு மதிப்பளித்து சுமார் 15 முஸ்லிம்களை சட்டமன்றத்திற்கு அனுப்பவேண்டும் என்ற ஒரு பெருந்தன்மையோடு நமக்கு அங்கீகாரம் தந்திருக்கிறார்கள் அல்ஹம்திலில்லாஹ்! .
சிறுபான்மை சமுதாயத்திற்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்கின்ற எண்ணத்தோடும், இஸ்லாமியர்களுக்கும் அவர்கள் இதயம் குளிர தம்மால் இயன்ற உதவிகளையும்,பாதுகாப்பையும் கொடுக்கவேண்டும் என்ற ஒரு புண்ணிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த 15 முஸ்லிகளுக்கு வேட்பாளர் என்ற அந்தஸ்த்தை அளித்து அரியணை ஏற்றி அழகு பார்க்க வேண்டுமென்கின்ற ஆசை!
இதுவரை எந்த கட்சியும் தந்திடாத முஸ்லிம்களுக்குறிய இடஒதுக்கீட்டை, தி .மு.கவின் தலைவர் கலைஞர் ஒருவரே நமக்களித்து நம் சமுதாயத்தை களிப்புக்குள்ளாக்கியவர்!
எந்த சூழ்நிலையிலும் உங்கள் பாதுகாவலனாக இனி இருப்பேன் இதற்கு முன் நடந்துவிட்ட பல கசப்பான சம்பவங்களான பிஜேபி யுடன் கூட்டு போன்ற ஒருசில சம்பவங்களால் பல முஸ்லிம்கள் மனவேதனை அடைந்ததையும் நானறிவேன்.அத்தவறுகளுக்காக நான் உளமுருக வருந்துவதோடு இனி அதுபோன்ற எந்த தவறும் எதிர்காலத்தில் நடைபெறாது என்ற உறுதிமொழியை தருகிறேன் என்று நம் காயல்மண்ணில் நடந்த மாபெரும் கூட்டத்தில் முறையிட்ட ஒரு ஒப்பற்ற தலைவர்தான் கலைஞர் அவர்கள்!
களத்தில் தி .மு.க அணியை எதிர்க்கும் பெரிய அணியாகிய அ தி மு க அணியின் தலைவி ஜெயலலிதா அவர்கள் தங்களின் இந்த ஐந்தாண்டுகால ஆட்சி காலத்தில் நமக்கு கிடைத்த இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்த ஒரு எள்ளளவு கூட உதவினார்களா என்றால்,இல்லாவே இல்லை.மாறாக ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு கொடுக்க ஒதுக்கிய இடஒதுக்கீட்டை வன்மையாகவும்,வெளிப்படையாகவும் எதிர்த்தவர்தான் இந்தஅம்மையார்.சென்ற பாராளுமன்ற தேர்தலில் குமரியில் பேசும்பொழுது நான்தான் 3.5 சதவீதம் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை கொடுத்தேன் என்று பகிரங்கமாக பொய்யை பகிர்ந்தவர்தான் இந்த பெண்மணி!
சென்ற தேர்தலில் ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோடியை கொள்ளையடித்து விட்டது தி.மு.க என்று கூப்பாடிட்டு ஆட்சிக்கு வந்த அம்மையார் அவர்கள்தான் பல முறைகேடு வழிகளிலும் பலகோடி சொத்துகளை சேர்த்தது பிடிபட்டதால் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை 100 கோடி அபராதம் என்று தீர்ப்பாகி, இந்தியாவிலேயே ஆட்சியில் இருந்த ஒரு முதலமைச்சர் சிறைத்தண்டனை அடைந்த பெருமையை பெற்றவர்.பின்னர் எப்படி வெளியே வந்தார் என்பதை இந்த நாடே அறியும்!
சென்ற பாராளுமன்ற தேர்தலில் மோடி அலை அனைத்து திசையிலும் வீசிக்கொண்டிருக்கும் போது கூட,சிறுபான்மை சமுதாய பாதுகாவலனாக இருப்பேன் ,மதவெறி கட்சிகளை மண்தோண்டிப்புதைப்பேன் என்ற சூளுரைக்கொள்கையோடு களம் இறங்கியவர்தான் முத்தமிழ் தலைவர் கலைஞர் அவர்கள்!
உண்மையிலேயே 2G ஸ்பெக்ட்ரம் என்று சொல்கின்ற கற்பனை ஊழலுக்கும் தி.மு.க விற்கும் தொடர்பு இருந்திருக்குமேயானால் தங்கள் சுயநலம் கருதி,தங்கள் வழக்குக்கு சாதகம் தேடி பிஜேபி யை அல்லவா ஆதரித்து இருக்கவேண்டும் தி.மு.க.
ஆகவே,காயல் நகர கண்மணிகளே நம் சமுதாய சகோதரர்கள் 15 பேர்களும் வெற்றிபெற்று வீறு நடையோடு சட்டமன்றம் சென்றால், நம்மினம் எந்த அளவிற்கு கௌரவத்தையும் மரியாதையும் பெற்று மிளிரும், அதனால் நம் சமுதாய மக்களுக்கு பல,பல நன்மைகள் வந்தடைய வழிபிறக்கும்.அடுத்த தேர்தலில் நம்மினத்தை நாடி ஓடிவருவார்கள் ஒவ்வொரு அரசியல் தலைவர்களும்!
அப்படிப்பட்ட புண்ணிய உதவியை செய்த தலைமையின் ஆசிபெற்ற வேட்பாளரான மனிதநேயரும், வரியவர்களையும், வறுமையில் வதங்கும் ஏழைகளையும் அவர்கள் இடம்தேடி ஓடி உதவக்கூடிய உத்தம குணத்தின் சீலர் அண்ணாச்சி அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டியது நமதுகடமையாகும். அதுதான் முஸ்லிம்களின் நன்றியுணர்வு மட்டுமல்ல,எங்கள் இனத்திற்கு உதவியாகவும், பாதுகாப்பாக்கவும் இருக்கும் தலைமைக்கு எங்களின் இதயசுத்தியோடும் உண்மையுடன்கூடிய நன்றியுணர்வோடும் நடப்போம் என்பதை இப்பரணியறிய பறைசாற்றும் ஒரு பிரதிஉபகார முன்மாதிரியாகும்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross