Re:...சுறுசுறுப்பு விறுவிறுப்பு posted bymackie noohuthambi (kayalpatnam )[13 May 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43729
சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருப்பது தமிழக தேர்தல் களம் மட்டுமல்ல, இந்த இணையதளமும் கூடத்தான். வாழ்த்துக்கள்.
புதிய தலைமுறை தொலை காட்சி, தி தமிழ் ஹிந்து நாளிதழ் போன்றவைகள் மக்களை அவற்றின் கட்டுப் பாட்டில் வைத்துள்ளது. கட்டிப் போட்டு வைத்துள்ளது, அவ்வளவு சூடான வாக்கு வாதங்கள் விவாத மேடைகள், சமஸ் போன்ற நடுப்பக்க நாயகர்களின் கட்டுரைகள் எல்லாம் நம்மை வியக்க வைக்கின்றன..
இது போன்ற ஒரு தேர்தல் களத்தை நாங்கள் 1967 இல் சந்திக்கும்போது இந்த வசதிகள் எல்லாம் இல்லை.
''கீழே இறங்கு நீ கீழே இறங்கு
ஆண்டது போதும்
மக்கள் மாண்டது போதும்
கொள்ளை அடித்தது போதும்..
சீ சீ கீழே இறங்கு நீ கீழே இறங்கு
என்ற நாகூர் ஹனிபாவின் பாடல்தான் அப்போது ஹிட்டானது.
இந்த 50 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் இப்படியான தகவல் மீடியாக்களும் இல்லை. நமதூரில் இப்படியான இணையதளங்களும் இல்லை. தொடரட்டும் உங்கள் பணி. 19ம் திகதி வரை தூங்க விடமாட்டர்கள் போல் தெரிகிறது.
வேட்பாளர்களுக்கு தூக்கம் வராது அவர்களுக்கு பிரஷர் ஏறும் இறங்கும்.... அதில் நியாயம் இருக்கிறது. ஆனால் இந்த இணைய தளத்தை பார்ப்பவர்களுக்கும் படிப்பவர்களுக்கும் கருத்துக்களை பதிவு செய்பவர்களுக்கும் அப்படி ஆகி விட்டதே... அப்படி ஆக்கி விட்டீர்களே.....
''தேன் எடுப்பவர்களுக்கு வாய் இல்லையா.?'' இன்று சமஸ் அவர்களின் கலக்கல் கட்டுரை...
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மக்கள் நலக் கூட்டணி இவற்றில் இப்போது களத்தில் நிற்கும் முஸ்லிகள் எண்ணிக்கையை விலாவாரியாக அறியத்தாருங்கள். நன்றி...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross