செய்தி: DCW தொழிற்சாலை குறித்த தீர்ப்பை எதிர்த்து, காயல்பட்டணம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) தாக்கல் செய்திருந்த மறு சீராய்வு மனுவும் நிராகரிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:DCWதொழிற்ச்சாலை குறித்த தீர்ப்பை எதிர்த்து... KEPA தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுவும் நிராகரிப்பு. posted byசாளை:M.A.K.முஹம்மத்இப்ராஹீம்ஸுஃபி. ( கோழிக்கோடு- கேரளா.)[14 May 2016] IP: 64.*.*.* United States | Comment Reference Number: 43731
நம் பாரதத்திருநாட்டின் ஜனநாயக தூண்களில் நீதித் துறையும் ஒன்று என்று வர்ணிக்கப்படுகின்றது. இவ்வாறான நீதித்துறையால் வழங்கப்படும் தீர்ப்புகள் கூட சில சந்தர்ப்பங்களில் தீர்ப்புக் கூறுவதற்க்கு தேவையான முறையான ஆதார ஆவணங்கள் என்ற அடிப்படைகள் எல்லாம் கண்டுக்கொள்ளப்படாமல் புரந்தள்ளப்பட்டு 'நிதி'யாராத்தை மட்டும் அடிப்படையாக வைத்து தீர்ப்பு என்ற பெயரில் சில (அ)நீதிகள் வழங்கப்படுகின்றதை ஜனநாயகத்தின் மற்றொரு தூணான ஊடகங்கள் மூலமாக நாம் இடையிடையே காண்பது நம் போன்றவர்களை மிகவும் கவலைக் கொள்ளச் செய்கின்றது.
DCW விரிவாக்கத்திற்க்கெதிராக நம் KEPA சார்பாக தகுந்த ஆதார ஆவணங்கள் சமர்ப்பித்தும் அவ்வாதாரங்களை 'நிதி'க்காக கண்டும் காணாமல் புறந்தள்ளப்பட்டதா..? அல்லது மனித பலஹீனத்தின் கவனக்குறைவு என்ற அடிப்படையில் புறந்தளப் பட்டதா..? என்ற நம் நியாயமான எண்னங்களின் உண்மை நிலையை அகிலங்களின் இறைவனான அல்லாஹ் ஒருவன் மட்டுமே நன்கறிந்தவன்.
நம் எண்னங்களின் முதலில் உள்ளதுதான் உண்மை நிலையென்றால் நீதியரசர்களுக்கெல்லாம் தலைச் சிறந்த நீதியரசனான அல்லாஹ்வின் சாபம் அவர்கள் மேல் என்றென்றும் நிலைத்து விடும். நாம் எண்ணும் இரண்டாவதான மனித பலஹீனம் என்ற கவனக்குறைவு தான் உண்மையென்றால் அல்லாஹ் அவர்களுக்கு நுட்பமான கவனம் என்ற பலத்தை கொடுத்து அவர்களுடைய வாழ்வை வசந்த மாக்கி வைப்பான்.
இவ்வளவு காட்டமான வார்த்தைகளை நாம் பயன்படுத்த காரணம் DCW என்ற சுற்றுச்சூழழுக்கு மாசுப்பறப்பும் நிறுவனத்தின் மூலமாக பல ஆண்டுகளாகியும் அழியாத்தன்மை கொண்ட பாதரசக்கழிவுகளை கடலில் கலந்ததால் அதை உட்கொண்ட மீன்களின் வயிற்றில் தங்கி விடுகின்றது. அவ்வாறான மீன்களை அறியாமல் உணவாக உட்கொள்கின்ற DCW என்ற விசப்பரப்பியின் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் ஆரோக்கியம் எத்தகையதாக இருக்கும் என்று சம்பந்தபட்டவர்கள் நெஞ்சில் கையை வைத்து மனசாட்சியோடு சிந்தித்துப் பார்க்க கடமைபட்டுள்ளீர்கள். மனிதன் உயிர்வாழ முதன் மூல அடிப்படையான தேவை சுகாதாரம் மிக்க சுத்தமான காற்று. அந்த காற்றிலும்தான் அனுதினமும் அதிகாலை நேரங்களில் DCW கழிவு புகையை கலந்து விடுவதையும்
அதை கருவிலிருக்கும் குழந்தை முதல் முதியவர்கள் வரை சுவாசிப்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பீர்களா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross