Rஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன். posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[14 May 2016] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 43755
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.
கேட்டவுடனையே மனம் பதைபதைக்கிறது.நல்ல காரியத்திற்காகவும்,நல்ல நிய்யத்திலும்
உதவி செய்துவிட்டு வந்த அந்த இளவல்களுக்கு இப்படி ஒரு நிலை!
அல்லாஹ்விற்கு தெரியாதது ஒன்றும் இல்லை! எந்த ஒரு நபர் சிக்கலிலும்,சங்கடத்திலும் இருந்தாலும் அவர்களுக்கு உடனடியாக உதவுவதையே தன் வாழ்கையின் தத்துவமாக வாழ்ந்து வரும் என் நண்பர் ஹபீபின் அன்பு மகனுக்கு இப்படி ஒரு முடிவு என்றால்,இதயம் இச்சோகத்தை சுமக்க முடியாமல் கனக்கிறது!
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் எல்லா பிளைகளையும் பொறுத்து,அவருக்கு நேரடியான சுவர்க்க பூங்காவான ஜென்னத்துல் பிர்தவுஷ் என்ற நற்பதவியை நல்கியருள்வானாக ஆமீன்!
காயமுற்று சிகிச்சை பெரும் மற்றைய சகோதரர்களும் நல்ல சுகமேறி வீடுதிரும்ப வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக ஆமீன்!
அன்னாரின் பிரிவுத்துயரில் வதங்கும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் குறிப்பாக அன்பு நண்பர் ஹபீப் அவர்களுக்கும், அல்லாஹ் "சபுரன் ஜமீலா" என்ற அழகிய பொறுமையை கொடுத்தருள வேண்டியவனாக,என்னுடைய ஆழ்ந்த அனுதாபம் கலந்த ஆறுதலையும் சலாத்தினையையும் தெரிவித்துக்கொள்கிறேன்.அஸ்ஸலாமு அழைக்கும்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross