செய்தி எண் (ID #) 17740 | | |
சனி, மே 14, 2016 |
வாகன விபத்தில் காயலர் காலமானார்! மே 15 (நாளை) காலை 08.30 மணிக்கு நல்லடக்கம்!! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 8495 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (51) <> கருத்து பதிவு செய்ய |
|
காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த – தமிழ்நாடு ஹஜ் கமிட்டி செயற்குழு உறுப்பினர் / காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் அறங்காவலர்களுள் ஒருவரான பாளையம் ஹபீப் முஹம்மத் உடைய மகன் பாளையம் முஹம்மத் இஸ்மாஈல் ஸாஹிப், இன்று அதிகாலை 02.30 மணியளவில், நாங்குநேரி அருகே வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது விபத்தில் காலமானார். அவருக்கு வயது 41. அன்னார்,
மர்ஹூம் பாளையம் ஹபீப் முஹம்மத் ஆலிம், மர்ஹூம் சாளை செய்யித் முஹ்யித்தீன் ஆகியோரின் பூட்டனும்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரமுகர் மர்ஹூம் தியாகி பீ.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் அவர்களின் மகன் வழிப் பேரனும்,
மர்ஹூம் பிரபு முஹம்மத் தாஹா அவர்களின் மகள் வழிப் பேரனும்,
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் அறங்காவலர் / தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் செயற்குழு உறுப்பினர் பாளையம் ஹபீப் முஹம்மத் உடைய மகனும்,
மர்ஹூம் பிரபு ஜமாலுத்தீன் அவர்களின் மருமகனாரும்,
பாளையம் செய்யித் முஹ்யித்தீன், சிங்கப்பூர் காயல் நல மன்ற முன்னாள் தலைவர் பாளையம் முஹம்மத் ஹஸன், பாளையம் ஜெய்னுல் ஆப்தீன் ஆகியோரின் சகோதரர் மகனும்,
பிரபு ஹபீப் முஹம்மத், பிரபு ஷேக்னா லெப்பை ஆகியோரின் சகோதரி மகனும்,
எம்.எச்.செய்யித் அப்துர்ரஹ்மான் என்பவரின் சகளையும்,
பிரபு செய்யித் அப்துர்ரஹ்மான், பாளையம் முஹம்மத் அப்துல் காதிர், ‘நேஷனல்’ எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் ஆகியோரின் மச்சானும்,
பாளையம் எம்.ஐ.எஸ்.ஹபீப் முஹம்மத், பாளையம் எம்.ஐ.எஸ்.செய்யித் ஜமாலுத்தீன் ஆகியோரின் தந்தையுமாவார்.
அன்னாரின் ஜனாஸா, நாளை (15.05.2016. ஞாயிற்றுக்கிழமை) காலை 08.30 மணியளவில், காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
மறைந்த பாளையம் முஹம்மத் இஸ்மாஈலுடன் பயணித்த இரு நண்பர்கள் காயமுற்றுள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் உதவி:
K.M.N.மஹ்மூத் லெப்பை
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 18:58 / 14.05.2016.]
|