தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 16ஆம் நாளன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடப்பு சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
இன்று மாலையுடன் தேர்தல் பரப்புரைக்கான நேரம் முடிவுற்றது. இதனைக் கருத்திற்கொண்டு, இன்று 16.30 மணியளவில், காயல்பட்டினத்தின் பெரும்பாலான வீதிகள் வழியே - இரு சக்கர வாகனங்களில் அணிவகுத்துச் சென்ற தொண்டர்களுடன், வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பொதுமக்களிடம் ஆதரவு கோரினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் அவருக்கு ஆதரவு கோரி பரப்புரையாற்றிச் சென்றார்.
அவருடன், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்டவற்றின் நிர்வாகிகள், அங்கத்தினர் பல்வேறு இரு சக்கர - நாற்சக்கர வாகனங்களில் அணிவகுத்துச் சென்றனர்.
|