தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. 234 தொகுதிகளில் 3,776 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஜனநாயக வழி ஆட்சி முறையில் - தேர்தல், முக்கிய மற்றும் அடிப்படை தூணாகும். நாம் விரும்பும் ஆட்சியை தேர்வு செய்யவும், நாம் விரும்பாத ஆட்சியை நிராகரிக்கவும், புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும், எந்த வேட்பாளர் மீதும் நம்பிக்கை இல்லை என்ற உணர்வை NOTA (NONE OF THE ABOVE) மூலம் வெளிப்படுத்தவும் தேர்தல்கள் உதவுகின்றன.
நடப்பு தேர்தலில் 100 சதவீதம் வாக்கு பதிவு நடைபெற - தேர்தல் ஆணையம், பல்வேறு முறையில் பிரச்சாரங்கள் செய்து வருகிறது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறையாகும்.
காலை 7 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும்.
திருச்செந்தூர் தொகுதியில் காயல்பட்டினம் நகராட்சி அடங்கியுள்ளது.
காயல்பட்டினம் வாக்காளர்கள், தங்கள் ஜனநாயக உரிமையை நிலை நிறுத்தி - தங்கள் வாக்கினை பதிவு செய்து விட்டு, வாக்களித்த விரல் காட்சி தரும் வகையில் உங்களை புகைப்படம் எடுத்து, காயல்பட்டணம்.காம் இணையதளத்துடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
உங்கள் புகைப்படங்களை அலைப்பேசி மூலம் அனுப்ப
WHATSAPP எண் 98658 19541
உங்கள் புகைப்படங்களை ஈமெயில் மூலம் அனுப்ப
முகவரி - news@kayalpatnam.com
உங்கள் புகைப்படங்களை நீங்களே நேரடியாக TWITTER சேவை மூலம், #KAYALVOTERr,
#வாக்கு16 அல்லது #VAAKKU16 என்ற ஹாஷ்டாகுகள் பயன்படுத்தி பகிர்ந்துக் கொள்ளலாம்.
|