காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக சிறுமழையும், இதமழையும் மாறி மாறிப் பொழிந்து வானிலையின் வழமையை மாற்றியுள்ளது.
14.05.2016. சனிக்கிழமையன்று 23.00 மணி துவங்கி, இன்று அதிகாலை வரை வரை சிற்சிறு இடைவெளிகளுக்கிடையே நகரில் சாரல் மழை பெய்துகொண்டேயிருந்தது.
இன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம் மழையால் குறையக்கூடும் என்று அனைவரும் கணித்துக்கொண்டிருந்த நிலையில், காலை முதல் மாலை வரை மழை பெய்யவில்லை என்பதோடு, வெயில் இன்றி இதமான வானிலை நிலவியது.
வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்தில், மீண்டும் 17.30 மணியளவில் துவங்கி, இச்செய்தி வெளியிடப்படும் நேரம் (18.45 மணி) வரையிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்தவண்ணம் உள்ளது.
இதன் காரணமாக, நகரில் இதமான வானிலை நிலவுகிறது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திலிருந்து இன்று பெறப்பட்டுள்ள மழை பொழிவுப் பட்டியல் படி, காயல்பட்டினத்தில் 6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|