செளதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 94-வது செயற்குழு கூட்டம் கடந்த 06.05.2016 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப்பிறகு,ஜித்தா ,கந்தராவில் உள்ளகபாப் கார்னர் எனும் உணவகத்தில் உள்ள உள்ளரங்கில் வைத்து நடந்தேறிய அந்நிகழ்வுதனை பற்றி அம்மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருட்பெருங்கிருபையால் செளதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 94-வது செயற்குழு கூட்டம் கடந்த 06.05.2016 வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப்பின்
ஜித்தா கந்தராவில் உள்ள கபாப் கார்னர் உணவக உள்ளரங்கில் வைத்து நடைபெற்ற அக்கூட்டத்திற்கு சகோ.எம்.எம்.மூஸா சாகிப் தலைமை ஏற்று நடத்த சகோ.அரபி எம்.அய்.முஹம்மது ஷுஐப் இறைமறை ஓதிட
சகோ. எஸ்.எஸ்.ஜஃபர் சாதிக் வருகை தந்த அனைவரையும் அகமகிழ வரவேற்க அமர்வு இனிதே ஆரம்பமானது.
தலைமையுரை:
செயற்குழு அமர்விற்கு தலைமை வகித்த மன்ற ஆலோசகர் சகோ.எம்.எம்.மூஸா சாகிப் தனதுரையில், கடந்த மாதம் ஏப்ரல் முதல் தேதி காயலர் சங்கம நிகழ்வோடு நடைபெற்ற 35-ஆவது பொதுக்குழு நல்லபடி இறையருளால் அனைவரின் மகிழ்வான பங்களிப்போடு சிறப்பாக நடந்தது.அல்ஹம்துலில்லாஹ்.
இனி வரும் காலங்களில் நடைபெற உள்ள நிகழ்வுகளை மேலும் மெருகூட்ட தங்களது ஆலோசனையும் கருத்துக்களையும் இங்கே பதிவு செய்ய வேண்டுவதாயும் , தான் பணிநிமித்தமாக அடுத்து அமீரகம் செல்ல இருப்பதும் இருந்தாலும் அடிக்கடி ஜித்தா வந்து போவதும் அப்பொழுது நடைபெறும் நம் மன்ற கூட்டங்களில் இன்ஷா அல்லாஹ் தான் கலந்து கொள்வதாயும் நமக்குள் சில விசயங்களில் ஒருசில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இங்கே அவைகளையெல்லாம் மறந்து, இந்த மன்றம் சார்ந்த பணிகள் சிறக்க நாம் ஒற்றுமையுடன் இருப்பது மிகப் பெருமையாக இருக்கிறது. எனவே நம் மன்றம் மென்மேலும் நல்ல துடிப்புடன் செயல்பட்டு நம் ஊர் மக்களுக்கு நல்ல பல பணிகள் செய்திட நாம் அனைவரும் சந்தா மற்றும் நன்கொடைகளை வழங்கி ஒத்துழைக்க தங்களை விரும்பி கேட்டுக்கொள்வதாயும் தனது உரையை நிறைவு செய்தார்.
மன்ற செயல்பாடுகள்:
கடந்த கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களையும் மேலும் நிறைவேறிய மன்றப்பணிகள் மன்றம் சார்ந்த நிகழ்வுகளையும் மற்றும் இக்கூட்டத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் மிக தெளிவுடன் எடுத்துக்கூறி அமர்ந்தார் செயலாளர் சகோ.சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
மற்றொரு செயலாளர் சகோ,எம்.ஏ.செய்யிது இப்ராஹீம் நடந்து முடிந்த பொதுக்குழுவை நல்ல முறையில் நடத்திட அனுசரணை வழங்கியவருக்கும், வந்து கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டு, புதியதாக இந்த செயற்குழுவிற்கு வந்து நல் ஆலோசனை வழங்கிய சகோ.,எஸ்.எ.செய்து இஸ்மாயிலுக்கும் நன்றி சொல்லி தனது உரையில் சந்தாவை சுனக்கமின்றி செலுத்திட நினைவுபடுத்தி, ஆலோசகர் சகோ. மூஸா சாகிப் துபாய் பயணத்தையும் கூறி அனைவரின் சார்பாக வாழ்த்தி துஆ செய்து சுருக்கமாக சொல்லி நிறைவு செய்தார்.
நிதி நிலை:
கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் அனுசரணை வழங்கியவர்கள் நன்கொடையாக பெறப்பட்ட தொகைகள் வரவு ,செலவு வகைகள் மற்றும் மீதம் வந்த தொகைகள் பற்றியும் மன்றப்பொருளாளர் சகோ.எம்.எஸ்.எல். முஹம்மது ஆதம். விபரமாக கூறிடவும் மேலும் இந்த இருப்பு தொகையை அனைவரின் ஒப்புதலோடு மன்ற பொதுநிதியத்தில் சேர்க்கப்படவும் செய்யப்பட்டது. அடுத்து தற்போதைய இருப்பு, பெறப்பட்ட சந்தா மற்றும், மேலும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவிகள் போன்ற விபரம் மற்றும் நிதிநிலைகளையும் தெளிவாக விளக்கினார்.
மருத்துவ உதவிகள்:
மருத்துவ உதவி வேண்டி ஷிபா மருத்துவ கூட்டமைப்பின் மூலமாக பெறப்பட்ட பயனாளிகளின் விண்ணப்பங்கள் மன்ற துணைத்தலைவர் மருத்துவர் எம்.ஏ.முஹம்மது ஜியாத் முன்னிலையில் முறையே பரிசீலிக்கப்பட்டது.
சமீபத்தில் விபத்தில் காயமுற்று பாதிப்புக்குள்ளானவர்கள், சிறுநீரக குழாய் அறுவை சிகிச்சை, சிறுநீரக பாதிப்பு, மூட்டு அறுவை சிகிச்சை, பக்க வாதம், தைராய்டு, கண், குடல் இறக்கம், கால் நரம்பு போன்ற அறுவை சிகிச்சைகள், மூளை காய்ச்சல், மூளைகட்டி, மற்றும் நீரழிவு நோய் தொடர் சிகிச்சை என நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ள நம் காயல் சொந்தங்கள் மொத்தம் 24 பயனாளிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு அவர்களின் பூரண நல பேற்றுக்காக வல்லோன் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கப்பட்டது.
காயலின் சுவைமாறா ஏலம் இஞ்சியுடன் சூடான தேநீர் மற்றும் சமோசாவும் அனைவருக்கும் கூட்ட ஆரம்பத்தில் வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாட்டை சகோ ஏ.எம்.செய்யது அஹமது நல்லபடி செய்திருந்தார்.
தீர்மானங்கள்:
1, இக்ரா மற்றும் ஷிபா அமைப்பிற்கு நிர்வாக செலவு நிதியளித்தல். இக்ரா கல்வி சங்கம் மற்றும் ஷிபா மருத்துவ அறக்கட்டளைக்கு ஓராண்டு நிர்வாக செலவிற்கு என கடந்தாண்டுகளைப்போல் இவ்வாண்டும் நிதியுதவி அளிக்க எல்லோரின் சம்மதத்தோடு தீர்மானிக்கப்பட்டது.
2, உயர் கல்விகான உதவி தொகைகள் இக்ரா கல்வி சங்கம் மூலமாக ஆரம்ப காலம் தொட்டு தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் உயர்கல்விக்கான உதவி தொகைகள் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம்,
இரண்டாம் மற்றும் மூன்றாமாண்டு பயிலும் தலா 3 நபர் என மொத்தம் 9 மாணவ மாணவிகளுக்கும் மேலும் கடந்த இரண்டாண்டுகளாக ஒரு நபருக்கு கல்வி உதவி தொகை முழு தொகையாக வழங்கப்பட்டு வந்தது போல் இவ்வாண்டு மூன்றாமாண்டுக்கும் வழங்கிடவும் ஆக மொத்தம் பத்து பயனாளிகளுக்கு தொகைகள் அனைவரின் ஒப்புதலோடு வழங்கிட முடிவு செய்யப்பட்டது.
3, இறை பணியாற்றும் இமாம்கள்,முஅத்தின்களுக்கான பெருநாள் சிறப்புதவி . தாய்லாந்து காயல் நல மன்ற வழிகாட்டுதலோடு உலக காயல் நல மன்றங்கள் இணைந்து நமதூர் பள்ளிவாயில்களில் சன்மார்க்க இறை பணியாற்றும் இமாம்கள் மற்றும் முஅத்தின்களுக்கான புனித பெருநாள்களில் சிறப்பு தொகைகள் வழங்கும் உயரிய திட்டத்திற்கு கடந்த ஆண்டுகளில் நம் மன்றம் சார்பாக வழங்கப்பட்ட ஆதரவு போல் இவ்வாண்டும் இன்ஷா அல்லாஹ் அளித்திடவும் புனித ரமலானில் மன்ற உறுப்பினர்களின் மூலம் பெறப்படும் தொகைகள் முழுவதும் இத்திட்டத்திற்கு அளிக்கவும் அனைவரின் ஒட்டுமொத்த கருத்துடன் முழுமனதுடன் முடிவு செய்யப்பட்டது.
4 , 95-வது செயற்குழு மற்றும் 36-ஆவது பொதுக்குழு இப்தார் நிகழ்வுடன் நடைபெறும். மன்றத்தின் 95-வது செயற்குழு மற்றும் 36-ஆவது பொதுக்குழு கூட்டமும் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் வகையில் புனித ரமலான் நோன்பு திறப்பு இப்தார் நிகழ்வுடன் எதிர்வரும் 24-06-2016 ,வெள்ளிக்கிழமை மாலை 06-00 மணியளவில் இன்ஷா அல்லாஹ் நடத்திடவும் முடிவு செய்யப்பட்டது. இது நடைபெறும் நிகழ்விடம் அடுத்து அறிய தரப்படும்.
நன்றியுரை:
சகோ. எம்.டபிள்யூ.ஹாமீத் ரிபாய் நன்றி நவில சகோ. பிரபு எஸ்.ஜே.நூர்தீன் நெய்னா பிரார்த்திக்க துஆ , கஃப்பாராவுடன் உறுப்பினர்களின் நல்ல பல கருத்து பரிமாற்றத்திற்கு பின் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
சகோ.எஸ்.எஸ்.ஜஃபர் சாதிக் மற்றும் சகோ.என்.எம்.அப்துல் மஜீத் இருவரின் முழு அனுசரணையுடன் இரவு விருந்து நெய்ச்சோறு ரொட்டியுடன் பலவித கபாப் வகைகள் பரிமாறப்பட்டது.
தகவல் மற்றும் படங்கள்:
எஸ்.ஐச்.அப்துல் காதர்.
எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
06.05.2016.
|