Re:...அடி வயிற்றில் அமிலம் சுரந்தது posted bymackie noohuthambi (kayalpatnam )[14 May 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43760
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இணையத்தளத்தில் வந்த செய்தியை படித்தபோது அடிவயிற்றில் அமிலம் சுரந்தது.
ஹபீப் முஹம்மது அவர்கள் வீட்டுக்கு சென்று விசாரித்தபோது தம்பி இஸ்மாயில் அவர்கள், சகோதரர் அபூபக்கர் அவர்கள் வெற்றிக்காக கடையநல்லூர் சென்று பரப்புரையில் கலந்து விட்டு ஊர் திரும்பும் வழியில் நாகர்கோவில் சென்று இரத்த தானம் செய்து விட்டு திரும்பும் வழியில் நடந்த விபத்து பற்றி சொன்னார்கள்.
அல்லாஹ்வின் நாட்டப்படி அவர் ஒரு வாரத்துக்கு முன்தான் அவனது இல்லத்தை தவாப் செய்துவிட்டு நபிகள் நாயகம் அவர்களையும் தரிசித்துவிட்டு வந்துள்ளார் என்ற மேலதிக தகவலும் கிடைத்தது.
அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் எல்லா நற் செயல்களையும் கபூல் செய்வானாக.
ஹபீப் முஹம்மது அவர்கள் எனக்கு ஜித்தாவிலேயே அறிமுகமானவர்கள். ஹாஜிகளை அழைத்து விருந்து அளித்து கௌரவிப்பவர். ஹஜ் கமிட்டியில் நமக்கு ஏற்படும் சிரமங்களை கூர்ந்து கவனித்து அவற்றை களைவதில் முன்னணியில் நிற்பவர். பொது சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
தந்தை போலவே மகனும் இருப்பது எல்லா குடும்பத்திலும் நடக்கின்ற விஷயம் அல்ல. தம்பி இஸ்மாயில் அவர்கள் அந்த வகையில் தந்தையில் அடி சுவட்டை பின்பற்றி` நடக்கும் ஒரு `உயர்ந்த வாரிசாக திகழ்கிறார்.
சமாதானம் சொல்வதற்கோ பொறுமை சொல்வதற்கோ எனக்கு ஒன்றும் ஓடவில்லை. மனம் கனக்கிறது. PHM அவர்கள் குடும்பமே தியாகம் செய்யும் குடும்பமாகவே இருக்கிறது. மாஷா அல்லாஹ்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது மண்ணறையை விசாலமாக்கி வைப்பானாக. சொர்க்க பூங்காவாக குளிர செய்வானாக. அவர்களுக்கு மேலான சொர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக.
அவர் ஆசைப் பட்டபடி சகோதரர் அபூபக்கர் வெற்றி வாகை சூடவும் அவர் இரத்தம் கொடுத்தவர் பூரண சுகத்துடன் வீடு திரும்பவும் அவருடன் பயணித்தவர்கள் சுகமாக விரைவில் வீடு திரும்பவும் அல்லாஹ் அருள் புரிவானாக.
தன் அருமை மகனை இழந்து வாடும் சகோதரர் ஹபீப் முஹம்மது அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக. ஆமீன்.
உங்கள் துயரில் பங்கு கொள்ளும்
மக்கி நூஹுத்தம்பி & மக்கி ஆலிம் குடும்பத்தினர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross