குழந்தைகள் , குழந்தைகள்தான் posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[11 May 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4377
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அன்பு சகோதரர் சாளை.ஜியாவுதீன் அவர்களுக்கு, முதலாவதாக தாங்கள் என் கருத்தை பற்றி குறை சொல்வதாக நினைக்கவில்லை அதனால் நீங்கள் வருத்தப்பட வேண்டாம்.
அடுத்ததாக ஒரு வேளை நீங்கள் என் கருத்தில் குறையைக் கண்டு அந்த குறையை சொன்னால் கூட சந்தோசமே அடைவேன் - குறையை சுட்டிக் காட்டியதற்காக.
------------------------------------------
சரி, விசயத்திற்கு வருவோம் - இதுவும் குறை கூறுவதல்ல - ஒரு விளக்கமே.
அதாவது சென்ற மார்ச் மாதம் ( News ID 5831 ) உங்களுடைய கருத்து:
"பரிசு பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள் - பெண் குழந்தைகள் ஆண் வேடமும், ஆண் குழந்தைகள் பெண் வேடமும் போடவில்லைதானே. அப்புறம் மஹ்மூத் மாமாவிடம் "கொட்டு" வாங்கி விடாதீர்கள்" என்பதாகும்.
இதற்கு என்னுடைய கருத்து பதிவில் "குழந்தை பருவம்" என்று தலைப்பிட்டு, ஹதீதுகளுடன் நீண்ட விளக்கம் எழுதினேன். அதில் ஒரு பகுதிதான் " சகோதரர் ஜியாவுதீன் சொல்வது போல் குழந்தைகள் மாறுவேடம் போட்டிருந்தாலும் அவர்கள் "குட்டு" வாங்க மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் குழந்தைகள் அதுவும் சிறு குழந்தைகள்". என்பதாகும்.
அதன் அர்த்தம் என்ன? குழந்தைகளை சொல்லி குற்றமில்லை, அவர்களாக மாறுவேடம் அணிவதில்லை - அறியாப் பருவம் அதனால் அவர்கள் என்னிடம் "குட்டு" வாங்க மாட்டார்கள் என்று எழுதிவிட்டு, பெற்றோர்களும் - பள்ளிகூட நிர்வாகமும்தான்
கவனமாக இருக்க வேண்டும், நாளை மறுமையில் அல்லாஹ்! இடம் பதில் கூற வேண்டும் என்பதை மறைமுகமாக சொல்லி, எச்சரிக்குமுகமாக சில ஹதீதுகளை எழுதினேன். அந்த கருத்தை மீண்டும் படித்து பார்த்தால் விளங்கும்.
------------------------------
மேலும் குழந்தைகள், குழந்தையாக இருக்கும்போது மரணம் அடைந்தால் அவர்கள் செய்த தவறுகளுக்கெல்லாம் தண்டனை பெறப்போவதில்லை.
ஆனால் குழந்தைகளுக்கு மார்க்கத்திற்கு முரணான செயல்களை கற்றுக்கொடுத்த குற்றத்திற்காக பெற்றோர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ தண்டனைக் கிடைக்ககூடும் அல்லாஹு அஃலம்.
ஆனால் குழந்தைப் பருவத்திலே மார்க்கத்திற்கு முரணானவைகளை கற்று அதன்படி நடந்து அவர்கள் பெரியவர்களான பின்பும் அந்த பழக்கத்திலேயே இருந்து மரணித்தால் நிச்சயமாக அல்லாஹ்! தண்டனைத் தருவானே! அப்போது அந்த தண்டனைக்கு காரணமாக இருந்தது சிறு வயதில் அவர்கள் கற்றதுதானே!!! அப்படியானால் சிறுவயதில் அவர்களுக்கு கற்றுக்கொடுத்த குற்றத்திற்காக பெற்றோர்களுக்கும் அந்த பள்ளிக்கூட நிர்வாகத்திற்கும் தண்டனை உண்டா? இல்லையா?
----------------------------------------
அதனால் சகோதரரே! என்னுடைய மார்ச் மாத (News ID 5831) கருத்திலும் இந்த (News ID 6131) கருத்திலும் குழந்தைகள்,
குழந்தைகள்தான் என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.
ஆனால் அவர்களுக்கு கற்றுக்கொடுப்பவர்களைத்தான் சாடுகிறேன் - அது பெற்றோரானாலும் சரி, ஆசிரியரானாலும் சரி. "எய்தவனிருக்க - அம்பை நோவானேன்"
நீங்கள் புரியவில்லையே என்றதால் - இத்தனையையும் சுட்டிக்காட்டி இருக்கிறேன்.
சரி, சரி என்னுடைய கருத்துக்கு நீங்களும் ஒரு ரசிகன் என்று சொல்லுவதைப் பார்த்தால் - சீக்கிரமே ஒரு ரசிகர் மன்றம் தொடங்கப்படும்போல் தெரிகிறது.
வேண்டாம் மக்களே! நமது நகர்மன்றத்தை ஒழுங்காக வைத்தாலே போதும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross