என் தந்தையின் நண்பரான ஜனாப் பாளையம் ஹபீப் முஹம்மத் உடைய மகன், பாளையம் முஹம்மத் இஸ்மாஈல் ஸாஹிப் அவர்களின் கடந்த சில நாட்களாக செய்து வந்த நற் செயல்களை அறிந்து மனது பூரிப்படைக்கிறது.
சென்ற வாரம் புனித உம்ரா பயணம், நல்லவர்கள் ஆட்சிக்கு வரனும் என்று தேர்தல் பரப்புரை, அதன் நடுவில் ரசூல் (ஸல் ) அவர்கள் குறிப்பிட்ட ஏழு நற்காரியங்களில் முதலாவதான நோயாளிகளை நலம் விசாரிக்க செல்லுதல், அதிலும் அவர்களுக்கு குருதிக் கொடை கொடுத்துவிட்டு வரும் சமயம் சஹீதாகி விட்டார்கள் என்ற செய்தி....... அல்லாஹ் அக்பர்.
சமூக தளங்களில் இவர்களைப் பற்றி அனைவர்களும் பதித்த கருத்துக்களை பார்த்து, இவர்களுக்கு சுவனம் நிச்சயம் என்பது தெரிந்து விட்டது.
------------------------
( ஸஹீஹ் புஹாரி 1367 )
அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது" என்றார்கள்.
மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது?' எனக் கூறினார்கள்.
உமர்(ரலி) 'எது உறுதியாகிவிட்டது?' எனக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள், 'இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள். எனவே இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது.
ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாகவீர்கள்" எனக் கூறினார்கள்.
--------------------
கிருபையுள்ள வல்ல அல்லாஹ், அவர் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை மன்னித்து, இவரின் நற்காரியங்களை பன்மடங்காக அதிகரித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியான ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற பதவியை அளித்து, உன்னை காணக்கூடிய அறிய வாய்ப்பையும் அருள்வாயாக.
விபத்தில் காயமடைந்து இருக்கும் சகோதரர்களுக்கு பூரண சுகத்தை கொடுப்பாயாக.
துயரத்தில் வாடும் அன்பு சகோதரர் ஜனாப் பாளையம் ஹபீப் முஹம்மத் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.
பொறுமையை காக்கும் அனைவர்களுக்கும் வல்ல ரஹ்மான் பாவங்களை மன்னிப்பானாக.
______________________________
(ஸஹீஹ் புஹாரி 5641 & 5642 )
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.
இதை அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross