Re:...A SLIP BETWEEN THE CUP AND THE LIP posted bymackie noohuthambi (kayalpatnam )[20 May 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43891
A SLIP BETWEEN THE CUP AND THE LIP என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். கைக்கெட்டியது வாய்க்கெட்ட வில்லை என்று தமிழில் சொல்வார்கள். அப்படித்தான் இந்த தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கிறது .
நன்றி சொல்ல தமிழ் அகராதியில் வார்த்தைகள் இல்லை என்று முதலமைச்சர் சொல்கிறார். அகராதியை தேடித் பார்க்க வேண்டாம்]. 13வது முறையாக தோல்வியே இல்லாமல் சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப் பட்டுள்ள கலைஞர் கருணாநிதி அவர்களிடம் கேளுங்கள் உடனே பதில் கிடைக்கும்.
அவர் முத்தமிழ் காவலர் குறளோவிய நாயகர். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தொல்காப்பியமும் அவர் நுனி நாக்கில் விளையாடும். ராமாயணமும் மகாபாரதமும் அவருக்கு நன்கு புரியும் அதிலுள்ள செய்திகள் அவருக்கு ஒவ்வாமை என்றாலும் கம்பரையும் கர்ணனையும் அவர் புகழ்வார். ராமானுஜரின் சரிதைக்கும் கதை வசனம் எழுதும் சாணக்கியர் அவர்.
இந்த சட்டமன்றம் ஒரு புதுமையாக இருக்கும். இங்கே திராவிட கட்சிகள்தான் அரசாளும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று நீங்கள் அழைத்தாலும் அண்ணா நாமம் வாழ்க என்று வாழ்த்தினாலும் இரண்டிலும் கருணாநிதியின் முகம் தெரியும். எதிரிகள் கண்ணுக்கெட்டும் தூரத்தில் இல்லை என்று சொன்னீர்கள். யாருக்கும் எதிரிகள் வேண்டாம் ஆனால் குற்றங்களை சுட்டிக் காட்டும் எதிர்க் கட்சி கண்டிப்பாக வேண்டும் அப்படிப் பட்ட வலுவான எதிர்க் கட்சி இப்போது உங்கள் கண்ணெதிரே அல்ல உங்கள் கண்ணுக்கு அருகிலேயே விழிபோல் இருந்து உங்கள் மாசுகளை அகற்ற சட்டமன்றத்தில் நுழைந்திருக்கிறது.
இனிமேல் விதி எண் 110 - அறுதிப் பெரும்பான்மை என்ற மாயை விலகும். ஒரு ஆரோக்கியமான தமிழக சட்டமன்றமாக இது இருக்கப் போகிறது அண்ணாவின் தம்பி தங்கைகள் மட்டுமே கோலோச்சப் போகிறீர்கள். இருவரும் சேர்ந்து ஒற்றுமையுடன் இழுத்தால்தான் இந்த தமிழக தேர் நிலைக்கு வந்து சேரும் என்பதை இந்த நேரத்தில் உங்களுக்கு நினைவு படுத்தி,..
சந்தியாவின் மகளே வருக
இந்தியாவின் வளமிக்க தமிழகத்தில் நல்லாட்சி தருக
என்று வாழ்த்துகிறேன்.
என்று vaalthukiren.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross