அது ஒரு கனாக்காலம். posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[12 May 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4393
வாழ்த்துக்கள்...
பல வருடங்களுக்கு முன்பு எல்லாம் தமிழகத்தில் இருந்து IAS/IPS வருவது என்பது மிக.. மிக.. அரிது. அதிகமானோர் பீகார் மாநிலதில் இருந்துதான் வருவார்கள். தற்போது நிலைமை எல்லாம் மாறி விட்டது.
நம் ஊரில் இருந்து இதுவரை IAS/IPS வராதது வருந்தக்கூடிய விஷயம்தான். என்ன காரணம் என்று தெரியவில்லை. விழிப்புணர்வு இல்லாமையா அல்லது இந்த அதிகார மைய வேலை பிடிக்கவில்லையா, புரியவில்லை..
எங்கள் காலத்தில் அவ்வளவு விழிப்புணர்வு இல்லை. நானும் என் நண்பர்களும் முயற்சித்து, நான் Preliminary, Main Exam பாஸ் பண்ணி விட்டுவிட்டேன்.. ["என் கம்மாவிற்கு கோட்டான் வேலை (அதாங்க போலீஸ் வேலை) என்றாலே ஒரு அலர்ஜி. நான் NCC உடுப்பு அணிந்து வந்தாலே பயந்து வீட்டை விட்டு ஓடிவிடுவார்கள்" ]
நண்பர்கள் பலர் தற்போது IPS OFFICER ஆக இருக்கிறார்கள். இன்னும் என் மனதை உறுத்திக்கொண்டு இருக்கும் விஷயம் இது மட்டும்தான்.(பின்பு சொற்ப காலம் INDIAN AIR FORCEஇல் குப்பை கொட்டியதும் உண்டு). அது ஒரு கனாக்காலம்.
மாணவர்களே, கொஞ்சம் முயற்சித்தால் மிகவும் ஈசி ஆக IAS/IPS ஆகலாம். தமிழில் கூட எழுதலாம்ங்க.. அந்த நாளுக்காக காத்துக்கொண்டு இருக்கின்றோம்... வல்ல ரஹ்மான் துணை புரிவான்...இன்ஷாஹ் அல்லாஹ்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross